Sriram Pazhanisamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sriram Pazhanisamy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Sep-2016
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  3

என் படைப்புகள்
Sriram Pazhanisamy செய்திகள்
Sriram Pazhanisamy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 5:46 pm

ஓடா நிலைகொண்டான்
தீரனிவன் பேரை சொன்னால் திக்கெட்டும் பகைநடுங்கும்,
சின்னமலையான் வீரம் சிலம்பொலியாய் எதிரொலிக்கும்,
நன்னெறியும், மறப்பண்பும் தன்னகத்தே கொண்டவன்,
பரியேறி பாய்ந்தவன், காவிரிக்கரையேறி ஆண்டவன்,
போர்க்களமே பறைசாற்றும் போராண்மை பெற்றவன்,
வெள்ளையனும் மண்டியிடும் மறவர்களை கொண்டவன்,
தறுகண்மை கொண்டவன், காலமறிந்து செல்பவன்,
கொங்கு நாடு முழுமைக்கும் மானவுணர்வு ஊட்டியவன்,
கூடிவந்து பகைவர்களை கூண்டோடு அழித்தவன்-
நல்மக்கள் புகழ்பாட நன்னிலத்தில் வாழ்ந்தவனை
நல்லப்பன் நலம்நாடி வஞ்சகத்தில் வீழ்த்திவிட
தன் நாடு பிணிதீர வீறுகொண்டு ஓடிய கால்
சங்ககிரி மலையதிலே ஓடா நிலையானது.
இவ

மேலும்

Sriram Pazhanisamy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 5:05 pm

#மரமானது நன்று
நட்டு மகிழ்தலும் நாடித்திரிதலும்
தத்திக்கிடந்ததும் தாவிப்பிடித்ததும்
கல்வி கற்றதும் கனவை தொலைத்ததும்
ஏறி களைத்ததும் ஏகாந்தம் கண்டதும்
உண்டு உயிர்த்ததும் உறங்கிக்கிடந்ததும்
கட்டி மேய்த்ததும் கடவுள் வீற்றதும்
வட்டப்பறந்ததும் வியந்து பார்த்ததும்
நினைவை இழந்ததும் நின்னை மறந்ததும்
விட்டு விடுத்ததும் வாடிப்போனதும்
வெட்டி அழித்ததும் வியர்த்துக்கிடந்ததும்
பட்டு போனதும் பாறை ஆனதும்
தொட்டு தொடர்தலும் தோயம் தேய்ந்ததும்
தப்பை உணர்ந்ததும் தாவரம் நட்டதும்
மரமானதும் மாமழைவந்ததும்
காகம் கரைந்ததும் காலை புலர்ந்தது..
இவண்,
ஸ்ரீராம் பழனிசாமி

மேலும்

மரமானது நன்று...... வாழ்த்துக்கள்!.. 29-Sep-2016 5:27 pm
கருத்துகள்

மேலே