ஓடா நிலைகொண்டான்

ஓடா நிலைகொண்டான்
தீரனிவன் பேரை சொன்னால் திக்கெட்டும் பகைநடுங்கும்,
சின்னமலையான் வீரம் சிலம்பொலியாய் எதிரொலிக்கும்,
நன்னெறியும், மறப்பண்பும் தன்னகத்தே கொண்டவன்,
பரியேறி பாய்ந்தவன், காவிரிக்கரையேறி ஆண்டவன்,
போர்க்களமே பறைசாற்றும் போராண்மை பெற்றவன்,
வெள்ளையனும் மண்டியிடும் மறவர்களை கொண்டவன்,
தறுகண்மை கொண்டவன், காலமறிந்து செல்பவன்,
கொங்கு நாடு முழுமைக்கும் மானவுணர்வு ஊட்டியவன்,
கூடிவந்து பகைவர்களை கூண்டோடு அழித்தவன்-
நல்மக்கள் புகழ்பாட நன்னிலத்தில் வாழ்ந்தவனை
நல்லப்பன் நலம்நாடி வஞ்சகத்தில் வீழ்த்திவிட
தன் நாடு பிணிதீர வீறுகொண்டு ஓடிய கால்
சங்ககிரி மலையதிலே ஓடா நிலையானது.
இவண்,
ஸ்ரீராம் பழனிசாமி

எழுதியவர் : (29-Sep-16, 5:46 pm)
சேர்த்தது : Sriram Pazhanisamy
பார்வை : 87

மேலே