பச்சைப்பனிமலர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பச்சைப்பனிமலர் |
இடம் | : திருகோணமலை |
பிறந்த தேதி | : 11-Oct-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-May-2016 |
பார்த்தவர்கள் | : 372 |
புள்ளி | : 56 |
காதலே போகாதே
என்னை விட்டு ...!
உன் விழி
காணாது என்
விழி திரைப்போட்டு
விடும் ...!
காதலே உன்
சிரிப்பொலி என்
இதயவறைகளை உடைப்பது
உன் செவிகளில்
ரீங்காரமிடவில்லயா ..
தென்றலாய் ..!
உன் மௌனம்
பாடும் காதல்
ஓசை ...
உன் கட்டாந்தரை
இதயத்தை
செழிப்பாக்கவில்லையா ...
காதலே கொஞ்சம்
தள்ளிப்போ ...!
உன் பிரிவாவது
உன் நிழலை
என்னிடமிருந்து
வெட்டிவிட ...!
உண்மை இங்கே
கசக்கிறது..
வேஷம் இங்கே
கம்பீரம் காட்டுகிறது..
நேர்மை உறங்கச்
செய்கிறது..
வஞ்சகம் செய்யும்
நாட்டியத்தில்...
காலம் மாறினாலும்
பொய்மை காலம்
கடக்கிறது..
கனவுகள் அழகாக
இருக்கிறது..
கற்பனையில்
கதைகளில்
நிஜங்களை
தேடிய பயணம்
சவால் தான்..
இழப்புகளை தாண்டியும்
இதயம் வலித்தாலும்
இன்னும் ஏதோ
இருக்கிறது என
எண்ணிய ஓட்டம்
நம்பிக்கையுடன்
நடைபோட்டு ல்
நாளை கனவுகள்
நிஜமாகும் மண்ணில்..
நம்பிக்கை ஒன்றே
வாழ்வின் ஆதாரம்..
பச்சிளம் சிசுவாய்
வந்த நாள்..
மண்ணில் மறையும்
அந்த நாள் வரை..
தேவையற்ற சிந்தனைகளை
உடைத்து எறிந்து
நல்லது மட்டும்
மனதில் நிறுத்தி
போராட வைக்கும்
வெற்றி பெற செய்யும்..
உறவுகளை பலப்படுத்தும்
உண்மையை உரக்கச்சொல்லும்..
பொறாமையை அகற்றும்
பொது நலம் பெருகும்..
உலகத்தை அழகாக மாற்றும்
உன்னை சாதனையாளராக்கும்..
பெண்ணென்று அடுக்களையில்
தள்ளுபவரை புறம்
தள்ளி முன்னேறு....
எதிர் பாலரைக் கண்டால்
தலை தாழ்த்தி நடந்த
காலம் கடந்து விட்டது,
இந்நூற்றாண்டில் இயலாது....
உன் வெற்றுடலுக்கு
மதிப்பளிக்கும் கயவரைக்
கண்டால் கடைவிழியால்
சுட்டெறித்து விடு....
உன் மதியை மதிக்கும்
இடத்தில் மனிதம்
மறவாமல் மற்றவரோடு
இணைந்து நிமிர்ந்த
நன் நடைபோடு
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாக....
பெண்ணென்ற சொல்லுக்கு
அவப்பெயர் உண்டாக்குபவளுக்கு,
அவளுக்கு தக்க தண்டனையளிக்க
மறவாதே, தவற்றுக்கு
பாலின பேதம் கிடையாது.....
இரு இனத்துக்கும்
வேறுபாடற்ற தண்டனையே,
இந்நாடு முன்னேற
மீந்திருக்கும் ஒரேவழி....
அஹிம்சைக்கு குரல் கொடுத்தவர்
உயிரோடு இருப்பி
பயத்தை தந்து
நிம்மதியான வாழ்க்கை
தொலைத்து விட்டாய்...
நாளைய உலகை
வினாக்குறி ஆக்கி விட்டாய்...
பள்ளிகளில் மாணவர் இன்றி
வெறுமையாக உள்ளன...
பலர் ஊதியம் தேட
வழியின்றி தவிக்க விட்டாய்...
சென்று விடு
எங்களை விட்டு
கொடிய கொரோனாவே...
என்னை பார்த்தவுடன்
சிலைபோல் இருந்த நீ
பேசினாய் ...!!
உன் பேச்சின் இனிமையில்
மயங்கி போன நான் ..!!
உன்னுடன் பேசுவதற்கு
வார்த்தைகள் கிடைக்காமல்
சிலைபோல் நின்றேன் ...!!
--கோவை சுபா
எரித்து விட்டு போகும்
நெருப்பு
காற்றில் வரைந்து விட்டு
போகும்
ஓவியம் புகை
நீருண்ட மேகம் மெல்ல
தவழ அதை
கண்ட விவசாயி கண்கள்
குளிர சடுதியில்
காற்று வந்து கலைத்த
சோகம்
நம் காதல் கலைந்த
சோகம்
பாலைவனத்தில்
நிலவு ஆடம்பரம்
நீர் அத்தியாவசியம்
நீ..என்னுயிர்!
தொடும் தூரத்தில்
இருப்பதை விட
தொலைவில் இருக்கையில்
இன்னும் அழகாய் நீ...
அருகில் பார்க்க வைக்கும்
அழகை விட
தூரத்தில் இருக்கையில்
நினைக்க வைக்கும்
உன் அழகே எனை
கொள்ளை கொள்ளுமே......
ஆயுதம் ஏந்தி போர் புரிந்திடின் கிட்டியது வெற்றியாக இருந்திருக்கும் அகிம்சையின் வழியில் மனதோடு போருற்றதால் சுதந்திரம் பெற்றோம்
எவரையும் வீழ்த்துதல் பெரிதன்று
மனதினால் வெல்வதரிது
ஆயுதப்போரெனில் நீண்டிருக்கும் அகிம்சையாதலால் முற்றுப் பெற்றது
ஆயுதம் ஏந்துதல் மனிதர் தம் மரபு
அகிம்சை ஏந்திய நீயே புது வரவு
நீ மண்ணில் தோன்றிய இந்நாளில் மாந்தர் அனைவரும் மரணிக்கும் நொடியிலும் ஆயுதம் தவிர்த்து அறம்காக்க அடியேன் வாயிலாக உறுதியேற்க நிந்தன் மாண்பினை முன்மொழிகிறேன்...