ராமச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராமச்சந்திரன் |
இடம் | : மணவை |
பிறந்த தேதி | : 03-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 17 |
உந்தன் வெப்பத்தை உலகுக்கு கொடுத்து
உன்னை குளிர்விக்க உட்கடல் சென்றாயோ
நீ மட்டும் எப்படி மேற்கில் மறைந்து
கிழக்கில் உதிக்கிறாய் உறங்கும்
வேளையில் இடம் மாறிச் சென்றாயோ
வெப்பத்தின் பிடியில் நீரும் தனது நிலையை
இழக்கும் கடலில் ஏதும் மாற்றம் இல்லையே
உந்தன் ஜாலம் என்னிடம் மட்டுமா?
ஊருக்கே படியளக்கும் உழவனுக்கு
பசி தீர்க்க ஒய்யாரமா வந்தவளே
நீ நடக்கும் நடையக் கண்டு என்
மனசு தவிக்குதடி திருவிழா கரகத்துக்கு
தினந்தோறும் ஒத்திகையா மேல்நாட்டு
மோகமுந்தான் உன்மேல வந்து
ஒட்டிகிச்சா வாய்க்காலில் தண்ணி
இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு
கரிசக்காட்டு பூமியெல்லாம் களையெடுக்க
ஏங்குதடி கஞ்சியத்தான் சீக்கிரமா
கரைச்சுத் தாடி களஞ்சியமே...
நீலக்கடல் ஓரத்துல நீ நடந்து
போகையில அலை ஓடி வந்து
கால் நனைக்க குடிதண்ணிப் பஞ்சம்
தீர்ந்ததடி உப்புக்கு போர் மூண்டதடி...
கொலை அறுக்க துணிந்த மனம் பகை மறக்க துணிவில்லையோ கோவம் நீயும் தணித்திருந்தால் பாவம் நானும் பிழைத்திருப்பேன் எனை சிதைக்க நீ நினைத்து உனை தொலைக்க வழி செய்தாய்...