முகவை சௌந்தர ராசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : முகவை சௌந்தர ராசன் |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 09-Aug-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 729 |
புள்ளி | : 45 |
நரம்பியல் துறையில் முனைவர்.
அவர்கள் ஓடிக்கொண்டே இருந்திருக்கின்றார்கள்..
என் முப்பாட்டனையொத்த முகமொன்றும் அலட்சியமாய் அக்கூட்டத்தில்..
சிக்கு விழுந்த நெடுஞ்சிகை..
சவரம் விழா தாடை..
மஞ்சள் குளித்த பற்வரிசை..
வயிற்றில் உயிர்புடைத்தவர்களும்
மாரில் உயிர்போர்த்தியவர்களும்
கூடவே ஓடியிருந்திருக்கின்றார்கள்..
பசிக்கு ஒரு வேட்டை,
இச்சைக்கு ஒரு கலவி,
அசதிக்கு ஒரு தூக்கம்.
ஞாயிறு திங்கள்
முந்நீர் மண்
மாரி கூதிர்
பிறப்பு இறப்பு
அனைற்றையும் ஓன்றாய் பாவித்து
அவர்கள் ஓடியிருந்திருக்கக்கூடும்..
சக்கரமும் சிக்கிமுக்கி கற்களும்
பரிணாமத்தின் ஆகச்சிறந்த
பாவமூட்டைகளென
உணர்ந்தே ஓடியிருந்திருக்கக்கூடும்..
நிலை
சுதந்திரத்தில்
'சு' மட்டுமே எமது பிறப்புரிமை!
'தந்திரம்' உமது சிறப்புரிமை!
தேய்ந்த செருப்பென்றால்
அதென்ன உங்களுக்கு
அவ்வளவு இளக்காரம்?
கால்வயிற்றுக் கஞ்சி பிழைக்க
கை நொந்து
கால் நொந்து
இடுப்பு விலகி
முதுகு வீங்கி
உழைத்தே சாகும்
சடலம் எம் உடலம்!
கலைந்த சிகையுடன்
வாடிய முகம் பார்ப்பதில்
என்னவொரு குதூகலம்!
வாயிலும் வயிற்றிலும் அடிப்பதில்
என்னவொரு பாண்டித்தியம்!
உம்
கழிவறை மஞ்சளுக்கு
ஹார்பிக் மரியாதை..
எம்
கனவுப் பட்சிகளுக்கு
கசாப்பு கம்பளம்..
குண்டுகள் வைத்து
கொத்தாய் மடிவது
தீவிரவாதமென்பீரா?
எம்
வாழ்க்கைச் சமையலை
வழித்து நக்கி
ஏப்பமா
ஆழக்குழி தோண்டி
அதிலே ஒரு முட்டையிட்டு
அன்னார்ந்துப் பார்த்தால்
ஐந்து வருடங்கள் ஓடிவிடும்!
இட்டதும் இடப்பட்டதும்
கூமுட்டைகளே!
கர்ணனுக்குக்கோர் கவசகுண்டலம்!
எனக்கு நீ!
தனித்த கருப்பையில்
உன் தனிமைத் தாகம் தீர
பாசமழையாய்
உன்னுடன் அவதரித்தவன் நான்!
சேர்ந்தே அழுகின்றோம்..
சேர்ந்தே சிரிக்கின்றோம்..
என் விழிகளுக்கு நீ பார்வையாய்!
உன் மொழிகளுக்கு நான் பொருளாய்!
உலகத்தீரே! நிற்க!
என் நிழலுக்கு உயிருண்டு, அவதானிப்பீராக!
நீ வா சகோதரா..
வள்ளுவனையும் அவ்வையையும்
நெஞ்சகத்தில் குடியமைத்து
ஓர் மாசற்ற தரணியைச் சமைப்போம்!
சனிக்கிழமை.
நள்ளிரவு 2 மணி.
இரவைத்தின்றபடி
படுக்கையில் புரண்டேன்..
'என்ன ஆனது எனக்கு?’ …
'இதோடு ஆயிரம் முறை'யென
தலையணை சொல்லியது
கணக்குப்பிள்ளையாய்...
தலையில் அடித்துக்கொண்டு
தலையணைக்கருகில்
என் தூக்கம், பரிதாபமாய்...
நான் என்ன செய்வேன்?
என் விண்மீன் தோட்டத்தில்
அவள் நட்பை
ஒரு விண்மீனாய்தான் வளர்த்தேன்..
இந்நாட்களில் மட்டுமெப்படி
முழுநிலவாய்த் தெரிகின்றது?
'அடடா...அப்படியா சங்கதி..
நானே சொல்கிறேன்..
உன் 'மார்க்ஸ்' கண்களுக்கு
அவள் 'ஜென்னி'யாய்த் தெரிகிறாள்'
சொல்லிச் சிரித்தது
சுற்றாத மின்விசிறி.
ஆ.. அவளை நான் விரும்புகிறேனா?
'அட மடையா...
இனியுமா தெரியவி