இரட்டையர்

கர்ணனுக்குக்கோர் கவசகுண்டலம்!
எனக்கு நீ!

தனித்த கருப்பையில்
உன் தனிமைத் தாகம் தீர
பாசமழையாய்
உன்னுடன் அவதரித்தவன் நான்!

சேர்ந்தே அழுகின்றோம்..
சேர்ந்தே சிரிக்கின்றோம்..

என் விழிகளுக்கு நீ பார்வையாய்!
உன் மொழிகளுக்கு நான் பொருளாய்!

உலகத்தீரே! நிற்க!
என் நிழலுக்கு உயிருண்டு, அவதானிப்பீராக!

நீ வா சகோதரா..
வள்ளுவனையும் அவ்வையையும்
நெஞ்சகத்தில் குடியமைத்து
ஓர் மாசற்ற தரணியைச் சமைப்போம்!

எழுதியவர் : த.சௌந்தர ராசன் (29-May-19, 11:28 am)
பார்வை : 204

மேலே