நீரின்றி அமையாது உன்னுலகு

இன்னும்
சற்று நேரத்தில்
வற்றப்போகும்
ஒற்றைக்குளத்தில்,
அனல் தின்று
சாகப்போகும்
அந்தக் கடைசி மீனின்
மரண சாசனம்..

மனித!
உன் மகவின் கருவொன்று
உன் கண்முன்னே
நாவறண்டுச் சாகும்
புழுவொன்றாய் சுருண்டு...
அன்று புரிதல் கடவாய்...
'நீரின்றி அமையாது உன்னுலகு!'

எழுதியவர் : த.சௌந்தர ராசன் (29-May-19, 11:26 am)
பார்வை : 497

மேலே