கனிஷ்கர் பேழை

உனது எதிரிகளின் மீதும்
எனது வாள்முனை ஒளி

மின்னலில் புணர்ந்து
புஷ்பங்கள் ஈன்றது.

கரைந்த ஓவியங்களிலிருந்து
கிளம்பிய நீல ஒளியினில்

அலைந்து தடுமாறும்
பகைவர்தம் அறிவுக்குள்ளும்

வரலாற்றில் கொட்டிக்கிடக்கும்
காலத்தின் பொன் எலும்புகளை
என் புன்னகையிலிருந்து
பொறுக்கிக்கொள்ள கடவதாக.

இனியும் வேட்கையுற்ற
எனது நம்பிக்கைகள்

அதிர்ந்து பாயாத முள்ளென
சோம்பியிருக்கலாம் நிலமடியில்.

பால்வீதி பயணத்தின்
கனவுகள் உடைந்த பாதையில்

தொடுத்துக்கொண்டிருந்த
சொற்களில் ஒளிர்ந்திடும்

புத்தனின் கருணையை
பரிதவிக்கும் உயிர்கட்கு
விலாசமாய் விட்டுவிடலாம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-May-19, 12:00 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 40

மேலே