பெண்

பெண்ணென்று அடுக்களையில்
தள்ளுபவரை புறம்
தள்ளி முன்னேறு....

எதிர் பாலரைக் கண்டால்
தலை தாழ்த்தி நடந்த
காலம் கடந்து விட்டது,
இந்நூற்றாண்டில் இயலாது....

உன் வெற்றுடலுக்கு
மதிப்பளிக்கும் கயவரைக்
கண்டால் கடைவிழியால்
சுட்டெறித்து விடு....

உன் மதியை மதிக்கும்
இடத்தில் மனிதம்
மறவாமல் மற்றவரோடு
இணைந்து நிமிர்ந்த
நன் நடைபோடு
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாக....

பெண்ணென்ற சொல்லுக்கு
அவப்பெயர் உண்டாக்குபவளுக்கு,
அவளுக்கு தக்க தண்டனையளிக்க
மறவாதே, தவற்றுக்கு
பாலின பேதம் கிடையாது.....

இரு இனத்துக்கும்
வேறுபாடற்ற தண்டனையே,
இந்நாடு முன்னேற
மீந்திருக்கும் ஒரேவழி....

அஹிம்சைக்கு குரல் கொடுத்தவர்
உயிரோடு இருப்பினும்
இக்கலியுகத்தின் அவலம் கண்டு
அஹிம்சைக்கு துணைபோன
தன்னையே தண்டித்திருப்பர்!!!

அறுபதில் ஆறைத் தேடும்
கிழட்டு நாய்களைக் கண்டால்
கல்லெடுத்து விரட்டி அடி....
நிமிற்ற இயலாத நாய்வாலை
கொன்றாலும் தவறில்லை,
இவ்வுலகம் உனைப் போற்றுமே
அல்லாது தூற்றாது.....

தெய்வத்திற்கு இணையாக,

பெண் என்றால்
பொருமையில் பூமாதேவி!
பெண் குழந்தையானால்
வீட்டின் லக்ஷ்மிதேவி!
அறிவில் சிறந்தவளாயின்
சரஸ்வதி தேவி!
வீர மங்கையாயின் அவள்
சக்தி சொரூபம்!

என்று தெய்வமாக
மதிப்பதாக கூறி
கபட நாடகம்
ஆற்றுவோர் அனேகம்
இங்கு....

பெண்ணை பெண்ணாக
மதித்தாலே போதும்,
போதைப் பொருளாக
காணாமல்.....

பெண், தெய்வமாக வாழ
கனவு காணவில்லை....
சக மனுஷியாக வாழ
வழி வகுத்தாலே, அவளுக்கு
கோடி நன்மை செய்ததாக
அர்த்தமாகும் இவ்வுலகில்....

இக்கபட நாடகங்களைக்
கண்டு மதியிழக்காமல்
தனக்கான பாதை வகுத்து
வீரநடைப் போட்டு
தனக்கான வாழ்வை
தக்க வைத்துக் கொள்
பெண்ணே.....

எழுதியவர் : கவி பாரதீ (1-Sep-21, 11:52 am)
Tanglish : pen
பார்வை : 195

மேலே