அப்பாவி போல

அப்பாவி போல....
___________________________ருத்ரா

அப்படி ஒரு அப்பாவி போல்
முகத்தை வைத்துக்கொண்டு
என்னைப் பார்க்கிறாய்?
உன்னை கண்ணாடியில் பார்.
ஒரு கடல்
கொந்தளித்துக்கொண்டிருப்பதை.
அங்கே இங்கே பார்த்து
அந்த ஆயிரம் வாலா
எனும் ஒசை கிளப்பாத
மௌன வெடிகளை
பிஞ்சு சிரிப்பாக்கி சிதற விடுகிறாயே
அது என் "கேளா ஒலி"அலைகளுக்குள்ளும்
புகுந்து குறு குறுக்கிறது.
என்றோ எங்கோ எப்போதோ
என்னைப்பார்த்து நீ வீசிய‌
சிகப்பு ரோஜா எனும்
உன் சிரிப்பு இருக்கிறது.
சருகு ஆகிடவே இல்லை.
சரி.
நீ பேச வேண்டாம்.
சின்ன முறுவல் கூட
தப்பித் தவறி சிந்தி விட வேண்டாம்.
திடீரென்று
"அழைப்பிதழ் நீட்டி"
அவசியம் கல்யாணத்துக்கு
வந்து விடுங்கள் என்ற‌
அணுகுண்டை மட்டும்
வீசி விடாதே!
________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (1-Sep-21, 12:51 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : appavi pola
பார்வை : 93

மேலே