காத்திருப்பு

துல்லியமில்லாத தூரத்தில்
நிற்கும் உந்தன்
தோராயணமான அழகை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
சருகிலைகள் எழுப்பும் சப்தமாய்
படபடத்துக்கொண்டிருக்கிறது இதயம்
உன்னையே விழிகளால்
விழுங்கிக்கொண்டிருக்கும் என்னை
எதிர்பாராமல் நீ
கவனிக்க நேர்கையில் ....
இப்போதும்
அனிச்சை வினையாகவே தொடர்கிறது இது
கல்லெறிந்தாலும்
கனி பறித்தாலும்
உனக்கானதே என் கிளை!