நிழலின் பயணம்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
இன்பமோ துன்பமோ என்னிலை ஆயினும்
என்றும் துணையாக நம்மோ டிருக்கும்
பிறந்ததும் நம்மையே நாளும் தொடர்ந்து
இருவிழி காணா இருளில் இருக்கும்
ஒருமொழி கூறா உயிர்க்குத் துணையாய்
இறந்தபின் மேனி எரித்து முடிக்க
விடுக்கும் பயணம் நிழல்
22-11-2016