Venkatachalam Dharmarajan - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் : Venkatachalam Dharmarajan
இடம் : தென்காசி (நெல்லை மாவட்டம்)
பிறந்த தேதி
:
18-Feb-1948
பாலினம்
:
ஆண்
சேர்ந்த நாள் : 20-Oct-2013
பார்த்தவர்கள் : 1585
புள்ளி : 1545
என்னைப் பற்றி...
ஆங்கில எழுத்துக்களை வைத்து "வேர்ட் பிளஸ்" என்ற ஒரு விளையாட்டு படைத்திருக்கிறேன். ஃபன் ஸ்கூல் நிறுவனம் இதை ஏற்று விற்பனை செய்து வருகின்றனர்.
என் படைப்புகள்
Venkatachalam Dharmarajan செய்திகள்
சின்னஞ் சிறுவயதில் அன்பென் றழைத்துன்னை
பின்தொடர்ந்து தந்திருப்பின் தொல்லைகள் - என்றேனும்
இன்றெனது பேருரைத்து சந்தியில் நிற்கவைத்து
கொன்றுவிடு கூர்வேல் எடுத்து!
மேலும்
சின்னஞ் சிறுவயதில் சிற்றிடையாள் என்றழைத்துப்
பின்தொடர்ந்தும் காதலென்றும் பேர்சொன்னேன்; - உன்னைநான்
என்றும் மறவேன் இனியவளே மாற்றமில்லா
அன்பெனக்குத் தந்தால் அழகு!
13-Oct-2018 8:21 pm
நெஞ்சக் குமிழிரண்டும் கொஞ்சம் தெரிந்தாலும்
வஞ்சியுனைக் கண்டு திறவார்வாய் - அஞ்சாத
நெஞ்சமுள்ள வஞ்சகரே ஆனாலும் அஞ்சுவார்
பஞ்சணையில் கொஞ்ச இனி!
மேலும்
அன்பேவா என்றும் அணைக்கவுடல் தாவென்றும்
இன்பம்தான் இன்றுனக்கு என்றுரைத்தும் - என்றொருவன்
இட்டமில்லா பெண்ணொருவள் அங்கத்தைத் தொட்டானோ
கெட்டவ னானானன் றே!
மேலும்
எண்ணற்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயத்தில்
என்னவரம் வேண்டினீர் சென்றங்கு - பெண்களே
காந்தமலை நாதனின் ஜோதிகண்கள் கண்டதும்
சாந்த மடைவதற்கு நீர்?
மேலும்
ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..
உலகைத் திருத்த யெவரால் முடியும்
உலகோர் நினைக்க முடியும் - பலரால்
உலகைத் திருத்தவுனை மாற்றிக்கொள் லோர்நாள்
உலகேமா றும்தனி யாய்
07-01-2017
மேலும்
ஐயா, வணக்கம். உலகை ஒருவரால் திருத்த முடியாது. ஆயின், பலரும் முயன்று தன்னை மாற்றிக்கொண்டால் உலகம் தானாகவே மாறிவிடும் என்பதே பொருள்.
07-Jan-2017 9:32 pm
நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை ஆனால் ஜெய்பதற்கு உலகமே உண்டு ..
வணக்கம்
கவிதை போற்றுதற்குரிய படைப்பு
விளக்கம் அளித்தால் அனைவரும் இலக்கியச் சுவை பருக முடியுமே !
பாராட்டுக்கள்
07-Jan-2017 5:40 pm
கீழே உள்ள இரு திருக்குறள்களில் எது எழுத்து பிழை அற்றது.
"சீரும்" அல்லது "சீறும்"
திருக்குறள் 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
சிறைநலனும் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
நன்றி
காயத்ரி
மேலும்
தெளிவித்தமைக்கு மிக்க நன்றி.
காயத்ரி
11-Nov-2016 3:05 pm
சீரும் என்பதே சரி. சீர் என்றால் பெண்கள் திருமணத்தின் போது கொடுக்கப்படும் பொருள்கள். சீர் கொடுத்தால் சகோதரி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இது வரும்.
சீறு என்றால் கோபம் கொண்டு கூறுவது.
02-Nov-2016 4:40 pm
வர்ஷன் பெயர் அர்த்தம் வேண்டும்
மேலும்
வர்ஷம் என்றல் பொழிதல் என்று பொருள் அமிர்தத்தை பொழிபவன் , மழையை பொழிபவன் எப்படியும் sollalam
05-Oct-2016 11:26 am
வர்ஷம் எனும் வடமொழி சொல் மழையை குறிக்கும், எனவே வர்ஷன் என்பது மழையை போன்றவன் என பொருள் படும்.
04-Oct-2016 9:27 pm
வர்ஷ் என்றால் மழை என்று பொருள். வர்ஷன் என்றால் மழைதரும் வர்ணன் என்று பொருள் .
04-Oct-2016 5:41 pm
வர்ஷினி வர்ஷா என்ற பெயருண்டு. மழை பொழிதலை குறிக்கும்
வர்ஷன் ---பொழியும் முகிலன் என்று சொல்லலாம்
முத்துவர்ஷன் ---முத்தைப் பொழிபவன் என்று சொல்லலாம்
அளவோடு சிரியுங்க . அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க !
அன்புடன்,கவின் சாரலன்
04-Oct-2016 5:25 pm
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கண்விழித்து காலையிலே கைபேசி பார்க்கையிலே
புன்னகைக்கும் அன்போடு நீயிடும்கு றுஞ்செய்தி
இன்றதனைக் காணோமே நோகுதடி என்னுள்ளம்
இன்றெனக் கில்லையோ "இச்"
02-10-2016
மேலும்
சம்பத் குமார் அவர்களே !
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி
ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி
மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய்
ஈற்றடியில் வைத்தேனீ சா
பல விகற்ப இன்னிசை வெண்பா
முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி
ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி
மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய்
நல்கிடலாம் நாளும்வெண் பா
02-Oct-2016 5:18 pm
சம்பத் குமார் அவர்களே ! தேடக் கிடைக்கும் வலைத்தளத்தில் யாப்பு இலக்கணம். ஓரிரு முறைகள் படித்தால் போதும்.
02-Oct-2016 5:01 pm
Innisai venbaavirku ilakkanam yaathu??
02-Oct-2016 4:05 pm
Sirappu
02-Oct-2016 4:04 pm
மேலும்...
கருத்துகள்
கருத்து சேர்க்க Login செய்யவும்