மகிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகிழன் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 30-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 989 |
புள்ளி | : 3 |
நான் ஒரு மென்பொருள் பொறியாளன். இசையும் தமிழும் என்னிரு கண்கள். கவிதை பாட பிடிக்கும் எனக்கு.
என் வலைத்தளம்: http://kavithaisaalai.blogspot.in/
செயற்கை அறிவே துணை
காலம்: 2067 கி.பி.
அன்புள்ள பெயரனுக்கு
என்னோடு அழிந்த தமிழினை
உன்னோடு சேர்த்த
ஏழாம் அறிவிக்கு
நன்றி !!
பறக்கும் தட்டில்
பள்ளிச் செல்பவனே
மறக்கும் ஒரு நாள்
உன் காலடி ஓசையே
பிரமனின் பணியினை
பங்கிடும் உனக்கு
மரபணு தைத்த
மகன் பிறப்பானோ ?
உணவுடன் வேளைக்கு
ஒரு மாத்திரை எனக்கு
உணவே வேளைக்கு
இரு மாத்திரை உனக்கு !!
கணினிச் சேற்றினில்
கை வைத்தது போதும்
இனி நீ சேற்றினில்
கால் வைத்திடு இல்லையெனில்
காலக்கடத்தியின் துணைகொண்டு
ஞாலப் பிழையினை இனங்கண்டு
திருத்தி அழித்திடு அதைக்கொண்டு
வாழிய நீயும் பல்லாண்டு
பச்ச மரத்த நிக்கவெச்சு வெட்டியாச்சு - இனி
மிச்சம் வெக்க ஒண்ணுமில்ல விட்டாச்சு
குட்ட குளம் வத்திப்போச்சு - அதுக்கு
நட்டஈடு கேக்காம மீனு செத்துப்போச்சு
மண்ண வித்து காச சேத்தியாச்சு - அது
உன்ன திண்ணும் தேதி வந்தாச்சு
காத்து எல்லா மாசாச்சு - வச்ச
நாத்து எல்லா மருந்தாச்சு
மெத்தனமா மீத்தேன வெளி யெடுத்தாச்சு
மத்த நிலம் குழாப் போட்டு கெடுத்தாச்சு
கிட்டத்தட்ட இந்த வீட்ட அழிச்சாச்சு
பட்ட போட செவ்வாய்க்கு கிளம்பியாச்சு
முன்னுரை:
மும்பை நகர சிவப்பு விளக்கு பகுதியில் வாழும் பெண்ணின் கதையை கவிதையாய் படைத்துள்ளேன். அப்பெண்ணின் தாய் விபாசாரதிர்க்கு தள்ளபட்டவர். சிறுவயதில் ஆசானால் கற்பழிக்க பட்டவர். தற்பொழுது பாலியல் கல்வியினை நாடகவழி நடத்தி வருகிறார்.
தாயவளினை கீழ்மகன் ஒருவன்
சதைப்பசி மாக்களுக்கு இரையளித்தானோ..
கூனாய் குருடாய் முடமாய்
அவன் மறுபிறப் பெடுத்திடுவானோ
கற்பித் துயர்த்திய ஆசான்
அவனே உன் கற்பழித்தானோ!
அவன் மக்கள் விரட்ட
நாதியில்லாமல் செத்து மடிந்திடுவானோ
கருநிறமென்றே உனை ஒதுக்கினரோ
உனது அகமழகிற்கு இணையாவரோ?
களவிப்புரத்தில் பிறந்தாய் ஆனால்
அறநெறி காத்து வளர்ந்தாய்
ப
வர்ஷன் பெயர் அர்த்தம் வேண்டும்