இயற்கைக்கு ஒப்பாரி

பச்ச மரத்த நிக்கவெச்சு வெட்டியாச்சு - இனி
மிச்சம் வெக்க ஒண்ணுமில்ல விட்டாச்சு

குட்ட குளம் வத்திப்போச்சு - அதுக்கு
நட்டஈடு கேக்காம மீனு செத்துப்போச்சு

மண்ண வித்து காச சேத்தியாச்சு - அது
உன்ன திண்ணும் தேதி வந்தாச்சு

காத்து எல்லா மாசாச்சு - வச்ச
நாத்து எல்லா மருந்தாச்சு

மெத்தனமா மீத்தேன வெளி யெடுத்தாச்சு
மத்த நிலம் குழாப் போட்டு கெடுத்தாச்சு

கிட்டத்தட்ட இந்த வீட்ட அழிச்சாச்சு
பட்ட போட செவ்வாய்க்கு கிளம்பியாச்சு

எழுதியவர் : (8-Oct-16, 10:16 am)
சேர்த்தது : மகிழன்
பார்வை : 171

மேலே