வீசி விட்டுப்போ
வீசி விட்டுப்போ!
===================================ருத்ரா இ.பரமசிவன்
உன்னை பார்க்கவில்லை
கண்கள் அழுகின்றன எனக்கென்ன?
உன் சொல் கேட்கவில்லை
என்று செவிகள் நோகின்றன
எனக்கென்ன வந்தது?
உனக்காக
காத்து காத்துப்பூத்துப்போனதில்
வினாடிகள் விறைத்தன.
யுகங்கள் மல்லாந்து கிடக்கின்றன.
காலம் இங்கு ஒரு மரக்கட்டை.
உன் தரிசனம் காட்டாமல்
எதுவும் துளிர்க்க
மறுக்கும் மரக்கட்டை
அதனால் எனக்கென்ன?
அனால் இதோ பார்
உன்தொடுதல் இன்றி
என்வருடல் இன்றி
உணர்வின் நரம்புகள்
தறி கெட்டு உள்ளே
ட்ரம் தட்டி தட்டி
கிழித்து கிழித்து
இசையமைக்கின்றனவே!
எனக்கென்ன வந்தது
என்று இருக்கமுடியவில்லை.
கிழிபடுவது உள்ளே
நம் இதயங்கள்!
எதில் நான்?எதில் நீ?
வலி ஒன்று.
உயிர் ஒன்று.
வதம் செய்யாதே
ஒரு பார்வை ரோஜாவை
வீசி விட்டுப்போ!
======================================