காமத்திபுரத்து கண்ணகி
முன்னுரை:
மும்பை நகர சிவப்பு விளக்கு பகுதியில் வாழும் பெண்ணின் கதையை கவிதையாய் படைத்துள்ளேன். அப்பெண்ணின் தாய் விபாசாரதிர்க்கு தள்ளபட்டவர். சிறுவயதில் ஆசானால் கற்பழிக்க பட்டவர். தற்பொழுது பாலியல் கல்வியினை நாடகவழி நடத்தி வருகிறார்.
தாயவளினை கீழ்மகன் ஒருவன்
சதைப்பசி மாக்களுக்கு இரையளித்தானோ..
கூனாய் குருடாய் முடமாய்
அவன் மறுபிறப் பெடுத்திடுவானோ
கற்பித் துயர்த்திய ஆசான்
அவனே உன் கற்பழித்தானோ!
அவன் மக்கள் விரட்ட
நாதியில்லாமல் செத்து மடிந்திடுவானோ
கருநிறமென்றே உனை ஒதுக்கினரோ
உனது அகமழகிற்கு இணையாவரோ?
களவிப்புரத்தில் பிறந்தாய் ஆனால்
அறநெறி காத்து வளர்ந்தாய்
பெண்ணே
நீயொறு வாழும் கண்ணகியோ!!