விடியலைத் தேடி
எவருக்காக எழுதப்படுகிறது...?
என்போன்ற எழுத்தாளர்களுக்கு மத்தியில்
எதற்குமே உதவாத இதுபோன்ற வசைவரிகள்...?
எதுவும் அறியாதவாறு என்றும் இயல்பாய் தோன்றும்
காலைக் கதிரவனின் வெட்டான கதிரொளிக்கா...?
அக் கதிரொளிபட்டு உருகிய பனிமழையில் கருகிய வேம்பு
இக்கரை வரை கடத்தப்பட்ட கதைக்காகவா..?
சிதையினைத் துளைக்கும் தோட்டாக்களின் வேகத்திற்கு அப்பால்
சதைகளுடன் சடலங்களாய் தப்பிய சக மானிடர்களுக்காகவா...?
தானே உதிரத்தொடங்கும் இதழ்கள் உருகிய தார்சாலைகள் எங்கும் கருகிக்கிடக்க
மீதமென்ன இருக்கப்போகிறது மிதமிஞ்சிய எங்களின் எழுத்தோலைகளில்...
சாலையோரம் கையேந்தும் கைக்குழந்தைகளின் ஒருவேளை உணவிற்கான ஓலம்
கண்ணாடிக் கதவுகளுக்குள் ஒளிந்திருக்கும் கர்ணன்களுக்கு கேட்டிடுமா...?