கரு நிற வானவில்

மின்மினியின் ஒளியில்
தெரிகிறது எங்கள் உலகம் ,
நிலவின் ஒளியில் கூட
எரிகிறது எங்கள் தேகம் ,
வர்ணங்கள் நிறைந்த வானில்
எங்கள் வானவில் கூட கருமையாக ,
பெற்றோர் இல்லாத உலகில்
அன்பு கூட வாடகையாக ,
கார்மேகத்தின் நீர்
தூய்மையாக இருப்பின்
எங்கள் வாழ்வின் அர்த்தம்
கூட கானல் நீராக ,
கடவுளை பார்த்திராத உலகில்
காணிக்கைகள் மட்டும் கோடிகளாக ,
கோவிலாக போற்ற வேண்டிய
இடங்கள் மட்டும் என்றுமே
"அனாதை இல்லங்களாக"...............

எழுதியவர் : மதியழகன் (4-Oct-16, 10:18 pm)
சேர்த்தது : மதியழகன்
Tanglish : karu nira vaanavil
பார்வை : 79

மேலே