மதியழகன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/maxpr_38165.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மதியழகன் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 03-Aug-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 34 |
காரிருள் மூழ்கியும்
பளிச்சென்று உன் முகம்..! நான்
கண்டது நிலவோ;அல்ல கனவோ..!!
தூக்கத்தில் நடந்தும்
உன்னைச் சேர முடியவில்லை;நான்
தொடர்வது உன் நிழலோ, இல்லை
அதுவும் கனவோ..!!
கண்கள் துறந்திருந்தும், உன்
முகம் காண வழியில்லை,
வழியெல்லாம் உன் நினைவோ,
விழி துறந்திருந்தும் பகல் கனவோ..!!
உன் கண் புருவக்காட்டில்
என் விரல்கள்
நடை போட வேண்டும்;
நடை முடிந்த பின்பும், அதன்
பயணம் தொடர வேண்டும் ..!
உன் மூக்கின் வளைவில் வேகத்தடைகள்
போடவேண்டும்,மெதுவாய்
கடக்க அது எனக்கு உதவவேண்டும்..!
அனைத்தும் பளிச்சிடும் நினைவோ..
அல்ல பழிக்காத கனவோ..!!
உன் கன்னக்குழியில் பனிப்பொழி
உன் கண்ணீர் துளியும்
எனக்கு மழைத்துளிதான்,
உன் இமையென்னும் மேகத்தை
அது வருடிவிட்டு வருவதால் !!!
காலத்தையும் மாற்றி அமைக்கும் காதல்!
காலபைரவனையும் கைது செய்யும் காதல்!
காதலிக்காத கடவுள் உண்டோ!
காதலியின் கண்களை வர்ணிக்காத
காதலன் உண்டோ!
கவிஞர்களின் வரிகளை அலங்கரிப்பது காதல்!
வந்தியத்தேவனை சிறைபிடித்தது குந்தவையின் காதல்!
காதலின் வலி சுகம் தானோ!
மீரா காத்திருப்பது நிஜம் தானோ!
வாள் முனையில் தேன் சொட்டும் காதல்,
வஞ்சி மனதில் மையல் கொண்ட
மாய காதல்!!
என் காதலை சொல்ல
மழையை தூது அனுப்பவா !
முடியாதே !!
தூது சென்ற மழை
என்னவனை தீண்டிய சுகத்தில்
சொல்ல வந்த செய்தியை
மறந்து விடுமே !!!
தென்றலை தூது அனுப்பவா !
அல்லது,
தேடி சென்று நானே சொல்லவா!!!
வாடை
இளஞ்சிவப்பு காலை, மஞ்சள் வெயில் மாலை,
காலங்கள் மாறுகிறது, அதன் நிறங்களும் மாறுகிறது,
என் கவிதையோ உனக்கான வரிகளை தேடுகிறது !!!
இரவும் வருகிறது, நிலவும் பின்தொடர்கிறது,
தெருவிளக்கின் அடியில்
என் நிழலோ உன் துணையை தேடுகிறது !!!
பூவாசம் வீசுகிறது, குயிலும் கூவுகிறது,
மேகங்களும் வழிவிடுகிறது
இம்மூன்றுமே, நீ வரும் தருணத்தை உணர்த்துகிறது !!!
நட்சத்திரங்களில் நீ அறிய வகை , இருப்பினும்
என்னுடன் குறும்பு செய்வதால் ,நீ
"வால்............ " நட்சத்திரம !!!
மின்சாரத்தை எதிர்பார்க்காமல்,
அம்மியில் மாவை அறைத்து, உணவு
செய்பவள் தான் அன்னை !!!
சைக்கிள் இருந்தாலும் என்னை
தனது முதுகில் ஏற்றி
சுமந்து செல்பவர் தான் தந்தை !!!
என்னவளைத் தேடி ஒரு பயணம் .,
புதிர் போட்டுக்கொண்டே தொடங்கினேன் நடைப்பயணம் ....
தென்றலே !
திசையில்லாமல் செல்கின்றேன் தென்றல் போல ,
எந்தஒரு மலரிலும் வாசமில்லை அவளது கூந்தல் போல !
தென்றலே ! அவளது வாசம் வீசிய திசை யாது ?
இரவே !
நிலவின் ஒளியும் போதவில்லை ,
மின்னிமியின் துணையும் நீலவில்லை ,
நிலவே ! என் விண்மீனை பார்த்தாயா ?
புயலே !
உன் சூழலில் மிஞ்சியவை எதுவுமில்லை ,
என் இதயம் அதில் மாட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை ,
புயலே ! உன் போட்டியாக வேறொரு புயலை இவ்வழியில்
என் இதயம் உன்னை
காவல் காப்பதனால், அதுவும்
ஆனது காவல் நிலையம் !!!
விழி மூட மறுக்கிறது ,
உன்னிடம் பேச துடிக்கிறது ,
விழியின் மொழி அறிந்தால் ,
நம் வாய்க்கு வேலை இல்லாமல் போகிறது !!!
சொற்களை ஒன்று திரட்டி,
வார்த்தைகளால் உன்னை வாழ்த்தி,
அழகிய பூக்களை பரிசளித்து,
என் அகராதியில் உள்ள
சொற்களும், வார்த்தைகளும், பூக்களும்
உன்னை வாழ்த்துமோ!
அல்லது
உன்னை வாழ்த்தியதால் அவ்வனைத்தும்
என் அகராதியில் சேருமோ????