மொழியரசு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மொழியரசு
இடம்:  ராஜபாளையம்
பிறந்த தேதி :  29-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2015
பார்த்தவர்கள்:  613
புள்ளி:  25

என் படைப்புகள்
மொழியரசு செய்திகள்
மொழியரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2017 11:10 am

வீடே அமைதியாக இருந்தது. மனதில் பல குழப்பங்களோடு தனது தட்டில் உள்ள தோசையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார் டேவிட் சக்கரவர்த்தி.
டேவிட் சக்கரவர்த்தி சொந்தமாக ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருபவர். நிறைய கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அவருடைய தின வாடிக்கையாளார்கள்.
"எப்போதும் கலகலன்னு பேசுவீங்க இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு" என்று தோசையை எடுத்துக்கொண்டு வந்து பக்கத்தில் அமர்ந்தாள் மல்லிகா.
மல்லிகா ஒரு பொறுப்பான குடும்ப தலைவி. அவளுக்கு தெரிந்த உலகமே அவளுடைய குடும்பம்தான். இந்த தம்பதியருக்கு இரண்டு பெண்குழந்தைகள்.
"என்னங்க நான் பேசிட்டு இருக்கேன் எதுவும் பதில் சொல்லாம

மேலும்

மொழியரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2017 3:32 pm

வீட்டையே கலவர பூமியாக மாற்றிக்கொண்டிருந்தார் பாஸ்கர்.
"அவனை ஒரு கல்லூரி பேராசிரியரா மாத்தி பாக்க நான் ஆசைப்பட்ட அவன் சினிமா காரண ஆகப்போறானாம்" என்று கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார்.
பாஸ்கர், அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிபவர். ஆசிரியர் பணியே உலகத்தில் உன்னதமான பணி என்ற சிந்தனை கொண்டவர்.
"சரி சரி அவன்கிட்ட நான் பேசுறேன்" என்று காபியை அத்தியவாரே சமாதான படுத்தினார் கலையரசி.
கலையரசி, ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றுபவர். குடும்பத்தையும் வேலையையும் ஒருங்கே கண்போல பார்க்கும் பாரதிகண்ட புரட்சி பெண்.
"எல்லாம் நீ கொடுக்குற செல்லம் எந்திரவியல் பொறியாளரில் முதுகலைப்பட்டம் படிச்சி

மேலும்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கனவுகள் இருப்பது இயல்பானது.ஆனால் சிலரின் கனவுகள் மட்டும் மிகவும் தூரமானது. வாழ்க்கை என்ற அழகிய பயணத்தில் கண்ணீர் சிந்திய நாட்கள் பலருக்கு ஏராளம் சிலருக்கு குறைவாக இருக்கலாம் ஆனால் கண்ணீர் சிந்தாத மனிதன் மட்டும் மண்ணில் இல்லை. சினிமா மீதுள்ள கனவுகள் நாளும் வளரும் வளர்பிறை போல நெஞ்சுக்குள் ஒளிமயம் வீசினாலும் வாய்ப்புக்கள் தேய்பிறை போல முயல்பவனை விட்டு அணுவணுவாய் நீங்கிக் கொண்ட போகிறது. அன்பு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் ஓர் உணர்வு. கரைகள் கடந்து தேகம் போனாலும் அக்கரையில் தான் அன்பான உள்ளம் தரித்து நிற்கிறது. கனவுகள் நிறைவேறும் வரை வாழ்க்கையை கொஞ்சமாவது ரசித்து வாழும் ஒரு தவணையாக வாழ்க்கை வாழ காலங்களை திட்டமிட்டு வாழ்வதே மேன்மையாகும். மனதை தொட்ட கதையோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Oct-2017 6:29 pm
மொழியரசு - மொழியரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2017 10:27 am

மாலை நேரம் மங்கிய ஒளியில் நிஷாவும் மாதவனும் தனியாக ஆற்றங்கரையில் எதுவுமே பேசாமல் நீண்ட நேரம் மெளனமாக நின்றுகொண்டிருந்தனர்.
மாதவன் மெதுவாக மவுனம் கலைத்தான்......
"நி....ஷா. ...... " மாதவனின் குரலில் வழக்காமான கம்பீரம் இல்லை
"சொல்லு மா. ..தா. .வா. ." நா தழுதழுத்தது நிஷாவிற்கு
நிஷாவின் கண்களிலும் மாதவனின் கண்களிலும் கண்ணீர் துளிகள் இருவரும் எதுவும் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.
"நிஷா என்னோட குடும்ப சூழ்நிலை உனக்கு தெரியும்........" என்று மாதவன் இழுத்தான்
"தெரியும். ...." என்று நிஷா பேசமுடியாமல் திணறினாள்.
"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கு நான் தான் கல்யாணம் பண்ணிவைக்கணும்" எ

மேலும்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே 15-Oct-2017 1:35 pm
நன்றி அய்யா 15-Oct-2017 1:35 pm
பொருத்தமான வண்ண காதலர் ஓவியம் 14-Oct-2017 2:31 am
இன்றைய நவீன காதல் இலக்கியம் படைப்புக்கு பாராட்டுக்கள் கற்பனை நயம் தொடரட்டும் காதல் இலக்கிய மலர்மாலைகள் 14-Oct-2017 2:30 am
மொழியரசு - மொழியரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 5:14 pm

திருமண மண்டபத்தின் வாசலில் பத்து அடிக்குமேலே உயரமான பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த பேனரில் மாயாவின் பெயருக்கு பக்கத்தில் வேறு ஒருவரின் பெயரை பார்க்க மனமில்லாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தான் கார்த்தி.
கார்த்தியும் மாயாவும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்தவர்கள். கார்த்தி கனத்த இதயத்தோடு வாசலில் நின்று பேனரை வெறித்து கொண்டிருந்தபோது.......
தம்பி வாசலிலேயே ஏன் நிக்குறீங்க உள்ள வாங்க என்று ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தான் மாயாவின் தந்தை. வராத புன்னகையை முகத்தில் போலியாக வரவழைத்துக்கொண்டு மண்டபத்திற்குள் நுழைந்தான் கார்த்தி.
மண்டபத்தில் நல்ல கூட்டம் முன்வரிசை இருக்கைகளில் ஆட்கள் இரு

மேலும்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி 15-Oct-2017 1:33 pm
நன்றி அய்யா 15-Oct-2017 1:32 pm
பொருத்தமான திருமண மண்டப மேடை :;மணப் பெண்ணோடு மணமகன் & முன்னாள் காதலன் (இல்லை இல்லை மணப்பெண்ணின் இந்நாள் சகோதரன் ) அருமை 14-Oct-2017 2:40 am
அகநானூற்று இனிய காதல் அனுபவங்கள் அந்த நாள் ஞாபகம் வந்ததே ! புதுமை நவீன அனுபவங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் இனிய காதல் அனுபவங்கள் 14-Oct-2017 2:36 am
மொழியரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 10:27 am

மாலை நேரம் மங்கிய ஒளியில் நிஷாவும் மாதவனும் தனியாக ஆற்றங்கரையில் எதுவுமே பேசாமல் நீண்ட நேரம் மெளனமாக நின்றுகொண்டிருந்தனர்.
மாதவன் மெதுவாக மவுனம் கலைத்தான்......
"நி....ஷா. ...... " மாதவனின் குரலில் வழக்காமான கம்பீரம் இல்லை
"சொல்லு மா. ..தா. .வா. ." நா தழுதழுத்தது நிஷாவிற்கு
நிஷாவின் கண்களிலும் மாதவனின் கண்களிலும் கண்ணீர் துளிகள் இருவரும் எதுவும் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.
"நிஷா என்னோட குடும்ப சூழ்நிலை உனக்கு தெரியும்........" என்று மாதவன் இழுத்தான்
"தெரியும். ...." என்று நிஷா பேசமுடியாமல் திணறினாள்.
"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கு நான் தான் கல்யாணம் பண்ணிவைக்கணும்" எ

மேலும்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே 15-Oct-2017 1:35 pm
நன்றி அய்யா 15-Oct-2017 1:35 pm
பொருத்தமான வண்ண காதலர் ஓவியம் 14-Oct-2017 2:31 am
இன்றைய நவீன காதல் இலக்கியம் படைப்புக்கு பாராட்டுக்கள் கற்பனை நயம் தொடரட்டும் காதல் இலக்கிய மலர்மாலைகள் 14-Oct-2017 2:30 am
மொழியரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2017 5:14 pm

திருமண மண்டபத்தின் வாசலில் பத்து அடிக்குமேலே உயரமான பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த பேனரில் மாயாவின் பெயருக்கு பக்கத்தில் வேறு ஒருவரின் பெயரை பார்க்க மனமில்லாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தான் கார்த்தி.
கார்த்தியும் மாயாவும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்தவர்கள். கார்த்தி கனத்த இதயத்தோடு வாசலில் நின்று பேனரை வெறித்து கொண்டிருந்தபோது.......
தம்பி வாசலிலேயே ஏன் நிக்குறீங்க உள்ள வாங்க என்று ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தான் மாயாவின் தந்தை. வராத புன்னகையை முகத்தில் போலியாக வரவழைத்துக்கொண்டு மண்டபத்திற்குள் நுழைந்தான் கார்த்தி.
மண்டபத்தில் நல்ல கூட்டம் முன்வரிசை இருக்கைகளில் ஆட்கள் இரு

மேலும்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி 15-Oct-2017 1:33 pm
நன்றி அய்யா 15-Oct-2017 1:32 pm
பொருத்தமான திருமண மண்டப மேடை :;மணப் பெண்ணோடு மணமகன் & முன்னாள் காதலன் (இல்லை இல்லை மணப்பெண்ணின் இந்நாள் சகோதரன் ) அருமை 14-Oct-2017 2:40 am
அகநானூற்று இனிய காதல் அனுபவங்கள் அந்த நாள் ஞாபகம் வந்ததே ! புதுமை நவீன அனுபவங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் இனிய காதல் அனுபவங்கள் 14-Oct-2017 2:36 am
மொழியரசு - மொழியரசு அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழரின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு அனுப்பும் கட்டுரைக்கான தலைப்புகள்
1. சங்க கால தமிழரின் வரலாறு
2. சங்க கால தமிழரின் பண்பாடு
3.சங்க கால தமிழரின் நாகரிகம்
4.சங்க கால தமிழரின் இறையியல்
5.சங்க கால தமிழரின் தொல்லியல் சான்றுகள்
6.சங்க கால தமிழரின் அறிவியல் அறிவு
7.சங்க கால சித்தர்களின் கடவுள் நம்பிக்கை
ஆகிய ஏழு தலைப்புகளுக்கு கீழ் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்

குறிப்பு :எமது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தேர்வு செய்ய சிரமம் கம்மியாகும்
கட்டுரைகளை சமர்ப்பிக்க நுழைவு கட்டணங்கள் இல்லை!!!!

மேலும்

கருத்து சொல்லும் பகுதியில் உங்கள் படைப்புக்களை சமர்பித்துளீர்கள் இதனை போட்டிக்குள் சமர்ப்பியுங்கள் 28-Oct-2016 10:54 am
சங்ககாலம் - பொற்காலம் ஒரு இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை மற்றும் கலாசார பண்பாட்டுக் கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும். இவ் வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கை முறை யைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றுள் காலத்திற் கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச் சிறந்து விளங்கும் ஒரு மொழியாகத் தமிழ்மொழி விளங்கி வருகின்றது. மக்களது வாழ்க்கைக்குப் பயன்தரும் முறையில் படைக்கப் பட்ட பல வகைக் கலைகளுள் இலக்கியம் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வின் சிறப்பியல்பாக உள்ள மொழியைக் கொண்டு இலக்கியம் விளைகிறது. உயர்ந்த கற்பனை, விழுமிய உணர்ச்சி, அழகிய வடிவமைப்பு ஆகியன கொண்டு அமைந்து படிப்பவரைப் பரவசப்படுத்தும் இலக்கியங்கள் தமிழில் ஏராளம். பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் மட்டுமே. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பல புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத் தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர். அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன. சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவை காதலும் வீரமுமே ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு ஒழுங்குமுறையாகத் தொகுக்கப்பட்டு எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என இரு பிரிவாக அமைந்துள்ளன. சேரர்கள் தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர். சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர். சோழர்கள் தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான். பாண்டியர்கள் தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக – பொருளாதார நிலைமைகளை குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. குறுநில மன்னர்கள் சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர். சங்க கால அரசியல் சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் – அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர். அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன. சங்க கால சமூகம் ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. - குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி - முல்லை, மேய்ச்சல் காடுகள் - மருதம், வேளாண் நிலங்கள் - நெய்தல், கடற்கரைப் பகுதி - பாலை, வறண்ட பூமி இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர். 1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்) 2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி) 3. மருதம் – முதன்மைக்கடவுள் – இந்திரன் ( தொழில்: வேளாண்மை) 4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி) 5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்) நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். சமயம் சங்க காலத்தின் முதன்மைக் கடவுள் முருகன் அல்லது சேயோன் தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அனவது நினைவாக வீரக்கல் நடப்பட்டடது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும். மகளிர் நிலை சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர். நுண்கலைகள் கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலங்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். ‘கூத்து’ மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது. சங்க காலப் பொருளாதாரம் வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர் கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும். சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும். இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டடதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டடது. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க கால்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், கிரேக்க – ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது. தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்நததது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன. தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘பெரிப்புளூஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆிகயவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன. பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும். சங்க காலத்தின் முடிவு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர். 28-Sep-2016 9:10 pm
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள் இலக்கிய, தொல்லியல், கல்வெட்டு, நாணய ஆய்வியல் மூலம் அறியப்படுகின்றது. இவற்றில் சங்க இலக்கியம் மிக முக்கியமானதாகும். இது கி.மு. பிற்கால இறுதி நூற்றாண்டு காலம் தொடக்கம் கி.பி ஆரம்ப காலப் பகுதிக்குரியதாகும். சங்க இலக்கிய செய்யுள்கள் பண்டைய தமிழகச் சமூகம் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் வேறுபட்ட பகுதிகளை வருணணை விளக்கமாக கொண்டுள்ளது. இவற்றின் பல பகுதிகளை ஆய்வாளர்கள் நம்பகமான விபரங்கள் என ஏற்றுக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட கிறித்தவ கால வளர்ச்சி ஏற்பட்ட காலப்பகுதி கிரேக்க உரோம இலக்கியங்கள் தமிழகத்திற்கும் உரோமைப் பேரரசுக்கும் இடையிலான கடல் வாணிபம் பற்றிய, தமிழ் நாட்டின் கரையோர பல துறைமுகங்களின் பெயர்கள் மற்றும் இடங்கள் உட்பட்ட விபரங்களைத் தருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளாய்வு அகழ்வுகள் சங்க கால எச்சங்களான பல்வகை மட்பாண்டங்கள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், தருவிக்கப்பட்ட மட்பாண்ட பொருட்கள், தொழிற்சாலைப் பொருட்கள், செங்கல் கட்டமைப்புக்கள், சுற்றும் திருகுச்சுருள் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. பாறைப்படிவியல், பண்டையெழுத்துமுறை நுட்பங்கள் போன்றவை சங்ககால அப்பொருட்களின் காலத்தைக் கணிக்க உதவியது. அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள் சங்க இலக்கியம் குறிப்பிடும் வேறுபட்ட பொருளாதார செயற்பாடுகளான விவசாயம், நெசவு, கொல்லர் வேலை, இரத்தினக் கற்கள் பட்டை தீட்டல், கட்டட கட்டுமானம், முத்து அகழ்வு, ஓவியம் ஆகியவற்றின் இருத்தலுக்கான சான்றை வழங்குகின்றது. குகைகளிலும் மட்பாண்டங்களிலும் காணப்பட்ட எழுத்துப் பொறிப்புக்கள் தமிழக வரலாறு பற்றி கற்றுக் கொள்வதற்கான இன்னுமொரு மூலமாகும். கேரளம், தமிழ்நாடு, இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து ஆகிய இடங்கள் பலவற்றில் தமிழ்ப் பிராமியிலான எழுத்துக்கள் காண்டுபிடிக்கப்பட்டன.[1] இவற்றில் அதிகமானவை அரசர்களாலும் மக்கள் தலைவர்கள் அல்லது தளபதிகளாலும் உருவாக்க அனுமதிக்கப்பட்டிருந்தன. சங்க சமூகத்தினாலும் ஏனைய விடயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இக்கால தமிழ் அரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அவர்களின் அரசின் நகர் மத்தி மற்றும் ஆற்றுப்படுக்கையிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. பல நாணயங்கள் அவற்றின் பின்புறத்தில் அரச சின்னத்தைக் கொண்டிருந்தன. சேரர் சின்னமான அம்பும் வில்லும் போன்றன சின்னங்கள் குறிப்பிடத்தக்கன. சில உருவப்படத்தையும் எழுத்துப் பொறிப்பையும் கொண்டிருந்ததன் மூலம் நாணய ஆய்வியலாளர்கள் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க உதவின. 28-Sep-2016 8:56 pm
மொழியரசு - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 1:24 pm

தமிழே தைமகளே பொங்குக பொங்கல்

விசும்பின் விழும் துளியில்,
ஆர்பரித்து ஆடிவரும்
காவிரியின் கவின் நடையில்,
உழவின் ஏர்முனையில்,

கழனிகள் உழுது ,
நாற்று நட்டு,
பயிர் வளர்த்து,
கதிர் அடித்து,
புதுப்பானை மஞ்சள்கட்டி,

புத்தரிசிப் பொங்கலிட்டு,
சுற்றத்தோர் சூழ்ந்திருக்க ,
தைமகளின் மடிவைத்து ,
கதிரவனுக்கு நாம் படைத்து ,

'பொங்கலோ பொங்கலென்று'
நன்றி நினைப்போம்
வழிவழியாய் தொழுதுநிற்போம்.

வைக்கோலை , வரப்பிடைப் புற்களை
மேயும் ஆவினத்திற்கொரு விழா...!,
கறந்து தரும் வெண்பாலில் திருவிழா ..!

பசுக் கழிவில் இயற்கை உரம்
பல்லுயிரில் பயிர்வளம்
மண்வளம் உயிர்காக்க

மேலும்

அன்புள்ள படைப்பளாருக்கு, போட்டியின் விதிமுறையின் படி தங்கள் படைப்புக்களை அனுப்பினால் தான் போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும் எழுத்து தளத்தில் போட்டியின் விதிமுறையை படித்துவிடுங்களேன்! நன்றி! அன்புடன் கவிஞன் பதிப்பகம் 15-Jan-2016 2:51 pm
வாசித்தமைக்கு அனேக நன்றிகள் நண்பரே . 13-Jan-2016 1:20 pm
நன்றிகள் நட்புகளே . 13-Jan-2016 1:20 pm
திரு நாளை அழகாய் படம் பிடிக்கும் வரிகள் உங்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன் 11-Jan-2016 3:21 pm
மொழியரசு - மொழியரசு அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

போட்டியில் யார் கலந்து கொள்ளலாம்

1. அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகள் விபரம்

கவிதைத் தலைப்புகள்:
பெண்
மொழி
இயற்கை
மழை
காதல்

சிறுகதைத்தலைப்புகள்:
காதல்
குடும்பம்
வாழ்க்கை
அறிவியல்
புனைவு
இயற்கை
பெண்

கட்டுரைத்தலைப்புகள்:
தமிழரின் கலாச்சாரம்
தமிழனும் அறிவியலும்
வள்ளுவரின் பார்வையில் உழவு
மேதகு அப்துல்கலாமும் தமிழ் ஆர்வமும்
இலக்கியத்தில் காதல்
மனிததெய்வம் காந்தியடிகளின் அன்புவழி

மேலும்

எமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளோம் 28-Apr-2016 8:55 pm
யார் பரிசு பெற்றார்கள் ? 15-Apr-2016 8:43 am
ஆம் உண்மை தோழா 15-Apr-2016 8:41 am
கடந்த ஆண்டு முதல் , 200 பணம் செலுத்துங்கள் , நூறு பணம் செலுத்துங்கள் உங்கள் கவிதை எங்கள் புத்தகத்தில் வெளியாகுமென்று பல மின்னஞ்சல்களை பார்த்தாகிவிட்டதும் , செலுத்திய பணத்திற்கு இதுவரை விடையேதும் கிடைக்காததும் மனம் வருந்தத்தக்க நிகழ்வுகள் .. மாணவர்கள் நலன் கருதி இட்ட கணக்கே , கடைசி கருத்தாக .. மேற்கூறியவை அனைத்தும் நடக்கும் பட்சத்தில் மகிழ்ச்சியே , நன்றி ! நாமு, படிக்கப் பட்டேன் தோழா 15-Apr-2016 8:40 am
மொழியரசு - மொழியரசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2015 2:08 pm

சதிஷ் தனது காரில் வேகமாக அவனது வீட்டை நோக்கி சென்றான். அப்பொழுது அப்பொழுது சதிஷின் செல்போன் ஒலித்தது. செல்போனை காரின் ஸ்பீக்கரில் ஆன் செய்தான்.
"ஹலோ சதீஷ் எங்கடா போன கொரங்கு உனக்கு போன் பண்ணினா தொடர்பு எல்லைக்கு வெளியே இருகுரார்னு வருது" என சத்தம் போட்டால் ஜெனிபர்.
"ஜெனிபர் சாரி நான் ஒரு ஆராய்சிக்காக செண்பகதோப்பு போயிருந்தேன் அங்க உள்ள சிக்னல் கிடைக்கல" என்றான் சதிஷ்.
"டே லூசு இப்படியே காடு மரம் செடி கொடின்னு அலைஞ்சுக்கிட்டு இருகிறத இன்னும் நீ விடலையா நீ எப்போ திருந்த போற" என கிண்டலாக கேட்டல் ஜென்பர்
"ஜெனிபர் இன்னைக்கு ஒரு சம்பவம் நடந்தது.... நீ ஒரு சைகாலகிஸ்ட் தானே..... எனக்கு ஒரு

மேலும்

மொழியரசு - மொழியரசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2015 4:23 pm

ஒரு தனி அறையில் சதீஷ் தனது புதிய கண்டு பிடிப்பான 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான ஒலியை கேட்கும் கருவியை செல்லிடைபேசியோடு இணைக்க மென்பொருளை உருவாக்கி கொண்டிருந்தான் . இது அவனது 20 வருட உழைப்பு.

அமனுசிய சப்தங்கள் உலகில் இருப்பதாய் அவன் கண்டுபிடிதிருந்தான் அதனை நிருபிக்க அவன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் இந்த புதிய கருவி.நாம் அன்றாடம் கேட்கும் சாதாரண ஒலிகள் எல்லாம் 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ்க்கு உட்பட்டது . ஹெர்ட்ஸ் என்பது ஒலியின் அளவை குறிக்கும் அலகை.

சதிஷ் தனது ஒலியை கேட்க்கும் கருவியை எடுத்துக்கொண்டு தனது காரில் ஏறினான். அமனுசிய சப்தங்கள் கேட்பதாக கூறப்பட்ட செண்பகத்தோப்பை நோக்கி வேகமா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மதியழகன்

மதியழகன்

தமிழ்நாடு
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே