மின்கவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மின்கவி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 12-Oct-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 1748 |
புள்ளி | : 329 |
தமிழ் ஆர்வலன்,
மின் பொறியாளன்
அஞ்சல்shanmugam12101960@gmail.com
சில படைப்பாக
மகிழ்வு நிரப்பிய நன்றிகள்!
வணக்கம் நட்புகளே
இது விவசாயிகள் அனைவருக்கும் சமர்பணம்
நட்புகளே பகிர்ந்து ஷேர் செய்யுங்கள்
மின்கவி https://youtu.be/ra-dBWW8tRA
புதுக்கவிதை உலகில் புதிய உணர்வுகளுக்கு புத்துணர்ச்சி தந்தவர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மின்கவி.புதுக்கவிதை பூந்தோட்டத்திற்க்கு பூபாளம் பாட புறப்பட்டுள்ளார். இலக்கிய உலகிற்கு இவர் ஓர் இனிய வரவு. சமுதாய அக்கறையோடு இவரின் கவிதைகள் வலம் வருகின்றன.அறிவியல் பார்வையாலும் அலங்கரித்துள்ளார்.இசை தழுவிய எண்ணமே கவிதை என்பார் கார்லைல் இசையும் இவர் கவிதைகளில் வெளிப்படுகிறது.சமுதாய அவலங்களையும்,தொடரும் துன்பங்களையும் தோலை நோக்கில் பார்த்துள்ளார்.மண் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதனின் புரட்சி ஆரம்பித்துள்ளது என்பதை கீழ்காணும் வரிகளில் பதிவிட்டுள்ளார்.
'பாலை நிலத்திலும்
பாறை இடுக்கிலும்
துண்டில் தின்ன
ஆசைகொள்ளும்
மீனுமில்லை.
புழுவை மறைத்த
தூண்டில் எதுவும்
தோல்வி கண்டதில்லை.
என்றாலும்
புழுவின் மீதாசை
கொள்ளா மீனுமில்லை.
இயற்கைமுறை
பிறழ்ந்த வாழ்வு
ஆசையெனும் தூண்டில் .
ஆசைகொண்டு
சதியில் சரிந்து
கவிழ்ந்திடல் சாபம்.
அறிவு அணைத்து
தேவை நினைந்து
விளைவை நோற்றல்
சாதனையின் சாரம்
உயர்வென்பதன் பொருளறியார்
எவருமில்லை என்பதனால்
உவமானம் உரைத்தும் பின்
ஏற்பதுவாய் சில குறிப்பில்
உய்தல் பற்றியதோர் புனைகவிதை
கவிக்கின்றேன் இக்கவியரங்கில்,
வளம் கொண்ட மண் வளர்க்கும்
உயிரான பயிர்கள் .
அதன் மாட்டு உயர்வுண்டு.
வளம்கொண்டு மனம் வளர்ப்போர்
மனிதம் என்னும் நேயம் வளர்த்தார்
அவர்தம் வாழ்வினில் ஒருயர்வுண்டு
வளர்ச்சியென்றபோதும்,
மகிழ்ச்சியென்றபோதும் ,
முந்தி வந்து நிற்கும்
உயர்ச்சி என்னும் பண்பு .
அது மானுடத்தின் மாண்பு.
பணம் வளர்த்தல் ஒன்றுதான்
உயர்வென்போர் பண்பட்டதில்லை,
நாள் மனம் வளர்த்தோர் வாழ்வில்
என்றும்
உயர்வென்பதன் பொருளறியார்
எவருமில்லை என்பதனால்
உவமானம் உரைத்தும் பின்
ஏற்பதுவாய் சில குறிப்பில்
உய்தல் பற்றியதோர் புனைகவிதை
கவிக்கின்றேன் இக்கவியரங்கில்,
வளம் கொண்ட மண் வளர்க்கும்
உயிரான பயிர்கள் .
அதன் மாட்டு உயர்வுண்டு.
வளம்கொண்டு மனம் வளர்ப்போர்
மனிதம் என்னும் நேயம் வளர்த்தார்
அவர்தம் வாழ்வினில் ஒருயர்வுண்டு
வளர்ச்சியென்றபோதும்,
மகிழ்ச்சியென்றபோதும் ,
முந்தி வந்து நிற்கும்
உயர்ச்சி என்னும் பண்பு .
அது மானுடத்தின் மாண்பு.
பணம் வளர்த்தல் ஒன்றுதான்
உயர்வென்போர் பண்பட்டதில்லை,
நாள் மனம் வளர்த்தோர் வாழ்வில்
என்றும்
கும்மிப்பாடல்
கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நல்லா
குலுங்கி சிரிச்சு கும்மியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நாட்டு
நடப்பச் சொல்லி கும்மியடி!
தண்ணீரை முழுசா உறிஞ்சிப்புட்டோம் - பச்சை
மரங்களை எல்லாம் வெட்டிப்புட்டோம்...
காத்துல அசுத்தத்தை கலந்துவிட்டோம் - நம்ம
பேச்சுல மட்டும்தான் முன்னேறிட்டோம்...
சோறு போடுற விவசாயத்தை விட்டு
விளை நிலங்களை வீணடித்தோம்...
ஆறு ஓடுற வழியெல்லாம் குறுக்கி
வீட்டக் கட்டி வாழ்ந்திருக்கோம்...
தப்பான ஆட்களைத் தேர்ந்தெடுத்து - நாம
அரசாங்க பதவி கொடுத்திருக்கோம்...
ஓட்டு போடற தேர்தல் நேரத்தில்
பழைய கதைகளை மறந்திருக்கோம்...
விண்ணைத் தாண்டி விண்வெளிய - நம்ம
விஞ்ஞானம் அளந்து வச்சிருக்கு...
தன்னைத் தானே சோதித்துப் பார்த்து
நானிலம் உயர வழிவகுப்போம்...
கும்மியடிப் பெண்ணே கும்மியடி - பல
மாற்றங்கள் வருதுன்னு கும்மியடி
பலமாகக் கைகளைத் தட்டுக்கடி - நம்ம
பூலோகம் எல்லாம் அதிரும்படி
தமிழே தைமகளே பொங்குக பொங்கல்
விசும்பின் விழும் துளியில்,
ஆர்பரித்து ஆடிவரும்
காவிரியின் கவின் நடையில்,
உழவின் ஏர்முனையில்,
கழனிகள் உழுது ,
நாற்று நட்டு,
பயிர் வளர்த்து,
கதிர் அடித்து,
புதுப்பானை மஞ்சள்கட்டி,
புத்தரிசிப் பொங்கலிட்டு,
சுற்றத்தோர் சூழ்ந்திருக்க ,
தைமகளின் மடிவைத்து ,
கதிரவனுக்கு நாம் படைத்து ,
'பொங்கலோ பொங்கலென்று'
நன்றி நினைப்போம்
வழிவழியாய் தொழுதுநிற்போம்.
வைக்கோலை , வரப்பிடைப் புற்களை
மேயும் ஆவினத்திற்கொரு விழா...!,
கறந்து தரும் வெண்பாலில் திருவிழா ..!
பசுக் கழிவில் இயற்கை உரம்
பல்லுயிரில் பயிர்வளம்
மண்வளம் உயிர்காக்க
தெரிந்த ஒருவனை
கோவிலில்
பார்த்து
என்ன கோவிலுக்கா
என்றேன்
ஆம்
கோவிலுக்குத்தான்
என்றான்
நான்
அவசரமாய்க்
குளியலறை சென்று
சுயஇன்பம் செய்து
வெளிவந்த
விந்துவில்
பிளாஸ்டிக் வாசம்
வருகிறதா என்று
பார்த்துக்கொண்டேன்
பத்திரத்தில் எழுதிவாங்கத்தான் வேண்டும்,
"லஞ்சம் வாங்க மாட்டேன்,
விதிமீறல் செய்யமாட்டேன் ,
ஊழலை ஒதுக்குவேன்..., " என்று..
இது தேர்தல் வரும் நேரமப்பா...!
என் பிள்ளையை
வளர்க்கத் தொடங்கிய போதே
குஞ்சுகள் வளர்க்கத் தொடங்கியது
எரவாரத்தில் சிட்டுக்குருவி.
அவைகளால் சங்கீதம் இசைத்துத்தான் நிகழ்ந்தது
எங்களின் இனிமையான ,
ஒவ்வொரு புலரும் காலைகளும்.
அறிவை வளர்க்க வென்றும்,
பிற்பாடு வயிறு வளர்க்க வென்றும்,
புலம் பெயர்ந்தோம் நகரம் நாடி.
எங்களுக்கும் சிட்டுக் குருவிக்குமான
உறவு இடைவெளி யோ
மிகப் பெரியதாகி விட்டது.
கூடு துறந்து துருவப்
பறவைபோல நான் வளர்த்த
மைந்தன் வெளிநா டொன்றில்.
இன்றும் அதே எரவாரம்
நோக்கி சிட்டுக் குருவிகளை
தேடியபடியே நான்.
நாங்கள் நகரம் நகர்ந்தது
போன்ற பொழுதொன்றில்தான்
எரவாரங்கள் அடுக்குமாடிகளாக
உணவுக்காக
அழும்
குழந்தைகள்
இருக்கும்வரை
நீங்கள்
படைக்கும்
எந்த
உணவும்
கடவுளுக்கு
ஜீரனமாகாது.
கடவுளை
ஒரு முறையாவது,
வந்து
மண்டியிட்டு
பிச்சை எடுக்க சொல் .
வலி புரியும் !