உயர்வு

உயர்வென்பதன் பொருளறியார்
எவருமில்லை என்பதனால்
உவமானம் உரைத்தும் பின்
ஏற்பதுவாய் சில குறிப்பில்
உய்தல் பற்றியதோர் புனைகவிதை
கவிக்கின்றேன் இக்கவியரங்கில்,

வளம் கொண்ட மண் வளர்க்கும்
உயிரான பயிர்கள் .
அதன் மாட்டு உயர்வுண்டு.

வளம்கொண்டு மனம் வளர்ப்போர்
மனிதம் என்னும் நேயம் வளர்த்தார்
அவர்தம் வாழ்வினில் ஒருயர்வுண்டு

வளர்ச்சியென்றபோதும்,
மகிழ்ச்சியென்றபோதும் ,
முந்தி வந்து நிற்கும்
உயர்ச்சி என்னும் பண்பு .
அது மானுடத்தின் மாண்பு.

பணம் வளர்த்தல் ஒன்றுதான்
உயர்வென்போர் பண்பட்டதில்லை,
நாள் மனம் வளர்த்தோர் வாழ்வில்
என்றும் தாழ்வு கண்டதில்லை .

மகிழ் வொன்றே நிறைவுநிலை என்று
தமிழ்க் கவிதை பண்பாடும்,
தமிழர் பண்பாடும் அதுவென
பல புதுக் கவிதைகள் சாற்றும்.

விழுப்பம் தரும் ஒழுக்கமது
உயர்வு பெறும் !
மனிதர் நலம் பேணும்
அன்பின் செல்வம்
உயர்வை மட்டும் பெறும் .

உயர உயர பருந்தின்
பார்வை விரியும்,
உயர்ந்த நிலையில் ,
பரந்த பாங்கில் ,சிறுமை யாவும்
சீர்மை பெறும்.

வளர்ந்த மனதின் பக்குவத்தில்
மானுடம் பண்பாடும்,
உயர்வதிலே உள்ளதென்று
தினமும் இசைபாடும்
நல் மனிதம் அதில்
பளிச்சிடவும் கூடும்...

எழுதியவர் : மின்கவி (24-Feb-17, 10:04 pm)
Tanglish : uyarvu
பார்வை : 250

மேலே