விளைவு நோற்க

துண்டில் தின்ன
ஆசைகொள்ளும்
மீனுமில்லை.

புழுவை மறைத்த
தூண்டில் எதுவும்
தோல்வி கண்டதில்லை.

என்றாலும்
புழுவின் மீதாசை
கொள்ளா மீனுமில்லை.

இயற்கைமுறை
பிறழ்ந்த வாழ்வு
ஆசையெனும் தூண்டில் .

ஆசைகொண்டு
சதியில் சரிந்து
கவிழ்ந்திடல் சாபம்.

அறிவு அணைத்து
தேவை நினைந்து
விளைவை நோற்றல்

சாதனையின் சாரம்

எழுதியவர் : (5-Apr-18, 9:31 pm)
பார்வை : 55

மேலே