மரமே நண்பன்
மனத்தை மயக்கும் தென்றல்
வானை உருக்கும் காற்று
வேலியே இல்லாத மழையை
வரவழைக்கும் பிரம்மன்
விதைக்குள் விதை வைத்து
விண்ணளவு உயரும் மலை
பச்சை வண்ண புடவையில்
மழை, வெயில் என் பாராமல்
தனித்து இருக்கும் தேவதை
தன்னை நம்பி இருக்கும்
வாயில்லா உயிர்களின் உறைவிடம்
தன்னையே கொடுத்து
பிறறை வாழ வைக்கும் ஒரு உயிர்
மரங்கள் அல்ல அவை
வாழ்வில் ஒரு உறவு,
நம்முடன் வளரும் நம் நண்பன்
நம் நண்பணை காக்க
கை கொடுங்கள்!!
மரம் வளர்ப்போம்!!!
நட்பை பெறுவோம்!!!