நிழல்

--------------

​உடன்வருவது
நிழல் ​மட்டுமல்ல ...
உயிருள்ள உடலின்
உயிரற்ற உருவம் ...
தூரிகை கொண்டு
வரையாத சித்திரம் ...

சேர்ந்தே நடப்பது
நிழல் மட்டுமல்ல ...
நிரம்பி வழியும்
நெருடல்களின் தேக்கம் ..

முன்ணணியில் நிற்கும்
​முந்திடும் நிழல்
சில நேரங்களில் ...

பக்கத்தில் பயணிக்கும்
தொடர்ந்திடும் நிழல்
​சில வேளைகளில்...

பின்னால் ஒளிந்திடும்
​பின்தொடரும் நிழல்
தொண்டனாக ...

நிழலுக்குத் தெரியாது
நிஜத்தின் உணர்வுகள் ..
நிழலும் அறியாது
நிஜத்தின் வலியை ...


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Apr-18, 3:44 pm)
Tanglish : nizhal
பார்வை : 2815

மேலே