மதிப்புரை

புதுக்கவிதை உலகில் புதிய உணர்வுகளுக்கு புத்துணர்ச்சி தந்தவர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மின்கவி.புதுக்கவிதை பூந்தோட்டத்திற்க்கு பூபாளம் பாட புறப்பட்டுள்ளார். இலக்கிய உலகிற்கு இவர் ஓர் இனிய வரவு. சமுதாய அக்கறையோடு இவரின் கவிதைகள் வலம் வருகின்றன.அறிவியல் பார்வையாலும் அலங்கரித்துள்ளார்.இசை தழுவிய எண்ணமே கவிதை என்பார் கார்லைல் இசையும் இவர் கவிதைகளில் வெளிப்படுகிறது.சமுதாய அவலங்களையும்,தொடரும் துன்பங்களையும் தோலை நோக்கில் பார்த்துள்ளார்.மண் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதனின் புரட்சி ஆரம்பித்துள்ளது என்பதை கீழ்காணும் வரிகளில் பதிவிட்டுள்ளார்.
'பாலை நிலத்திலும்
பாறை இடுக்கிலும்
பனிப்பூக்களில்
தேன் துளிதேடும்
வண்ணத்துப் பூச்சிகள்'
வண்ணத்துப் பூச்சிகளுக்கும் வறுமை ஏற்பட்டு விடும் என்கிறார்.
'மானுடம் தேடுவதற்க்காகவே ஓடிக் கொண்டிருக்கும் எங்களது கால்கள்'
மனிதநேயத்தைக் கண்டறிய கால்கள்
தேய்வதைப்பற்றி கவலை கொள்ளவில்லை என்கிறார்.
நிகழ் காலப் பிரச்சினைக்கு நிதானம் கூடாது,தீமைகள் தீர தேடுதல் வேண்டும் என்கிறார்.
காதலைப் பாடுவதில் கவிஞர்கள் கை தேர்ந்தவர்கள் என்பதை இவரும் உறுதி படுத்தியுள்ளார்.
"நியூட்ரானால் ஈர்க்கப் பட்டு சுழலும் எலக்ட்ரோன் "என்பது அணுவிதி அவளால் ஈர்க்கப்பட்ட
அவன்,ஹார்மோன் விதி என்கிறார்.

மொழியைப் போற்றி,காதல் வீணை ஏந்தி,வெள்ளிமின்னல்களை வெளிச்சத்தில் காட்ட விழைந்துள்ளார்.மானுடம் காக்க அடுத்த தலைமுறையை ஆனந்தப் படுத்த ஆலம் விதைகள் போல் மண்ணில் விழ வேண்டும் என்கிறார்.
இயற்க்கையை எப்போதும் பரவசத்துடன் பார்க்க வேண்டும் என்கிற இவரின் நோக்கம் வெற்றிபெற வணங்கி வாழ்த்துகிறேன்.

என்றென்றும்
அன்புடன்
முனைவர் கவிஞர்

அமுதாராமலிங்கம்.

எழுதியவர் : (23-Apr-18, 7:45 am)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 50

மேலே