நிஷா என்னை மன்னிச்சுடு

மாலை நேரம் மங்கிய ஒளியில் நிஷாவும் மாதவனும் தனியாக ஆற்றங்கரையில் எதுவுமே பேசாமல் நீண்ட நேரம் மெளனமாக நின்றுகொண்டிருந்தனர்.
மாதவன் மெதுவாக மவுனம் கலைத்தான்......
"நி....ஷா. ...... " மாதவனின் குரலில் வழக்காமான கம்பீரம் இல்லை
"சொல்லு மா. ..தா. .வா. ." நா தழுதழுத்தது நிஷாவிற்கு
நிஷாவின் கண்களிலும் மாதவனின் கண்களிலும் கண்ணீர் துளிகள் இருவரும் எதுவும் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.
"நிஷா என்னோட குடும்ப சூழ்நிலை உனக்கு தெரியும்........" என்று மாதவன் இழுத்தான்
"தெரியும். ...." என்று நிஷா பேசமுடியாமல் திணறினாள்.
"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கு நான் தான் கல்யாணம் பண்ணிவைக்கணும்" என்று மாதவன் நிறுத்தினான்.
" உனக்கு பொறுப்பிறுக்குனா என்னை ஏண்டா காதலித்த" என்று கேட்க வேண்டும் போல நிஷாவுக்கு தோன்றியது ஆனால் கோபத்தை விட அழுகையே அவளுக்கு முந்திக்கொண்டு வந்தது.
"அதோட நீ வேற மதம் நான் வேற மதம் நமக்கு சரியா வராது, நான் உன்ன நல்ல பாத்துக்க முடியும் ஆனால் நாம இரண்டுபேர் மட்டும் வாழறது இல்லை வாழ்க்கை., என்னோட குடும்பம் உன்ன எதுக்காதுடி" என்று மாதவன் சொல்ல வந்ததை கொட்டி தீர்த்தான்.
நிஷாவிற்கு அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு உலகமே இருளடைந்தது போன்று இருந்தது.
மாதவனை கட்டி அணைத்து குழந்தையை போல அழத்தொடங்கினாள்." நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சு பார்க்கவே முடியாதுடா" என்று கதறினாள் நிஷா.
" என்னை மன்னிச்சுடு டி ....." என்று மாதவன் அவளின் பிடியை தளர்த்தினான்.
தான் விலகி போனாலும் எப்பொழுதும் தன்னை கட்டி அணைப்பவன் இன்று நிஷாவின் பிடியை தளர்த்தியது நிஷாவால் நம்பமுடியவில்லை.
"மாதவன்....என்னை பஸ்டாப்பில் இறக்கி விட்டிரு" என்றாள் நிஷா கெஞ்சலாக
மாதவன் யோசித்தான்......
"இல்லடா இனி உன்கூட எப்பவும் நான் வரமுடியாது...ஸோ.... இன்னைக்கு மட்டும் ப்ளீஸ்....." என்றாள் நிஷா
"சரி நிஷா வண்டில ஏறு உன்னை பேரூந்துநிலையத்தில் விட்டுவிடுகிறேன்" என்றான் மாதவன்.
எப்பொழுதும் தன் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இறக்கி விடுபவன் இன்று பேரூந்துநிலையத்தோடு தன்னுடைய உறவை முடித்து கொள்ளும்போதே நிஷாவுக்கு புரிந்தது அவன் தன்னுடன் கடைசி வரை பயணிக்க போவதில்லை என்று.
மாதவன் நிஷாவை பேரூந்துநிலையத்தில் இறக்கி விட்டான் "சரி நிஷா நான் கிளம்புறேன் ...." என்றான் மாதவன்.
"பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் இருக்கு கொஞ்ச நேரம் மட்டும் என்கூட இருக்கியா" என்றாள் நிஷா
அதனை மறுக்க மாதவனுக்கு முடியவில்லை சரி என்று தலை அசைத்து பக்கத்திலேயே நின்றான்.
ஒரு நிமிடம் இருவரும் எதுவும் பேசவில்லை மனதில் இருவருக்கும் சோகம் அவர்களுக்கு வார்த்தைகளை வரவிடாமல் தொண்டையை அடைத்து கொண்டிருந்தது.
மாதவன் மெல்ல பேச தொடங்கினான் "நிஷா உனக்கு ஏத்த ஒரு நல்ல வாழ்க்கை, உனக்கு ஏத்த ஒரு நல்ல கணவன், என்னைவிட உன்ன அதிகம் காதலிக்கும் ஒருத்தன் கிடைப்பான் சோ. ....." என இழுத்தான்
"மாதவன் வேண்டாம் ப்ளீஸ் ....." என்று கண்கலங்கியது நிஷாவிற்கு
இதற்குமேல் தான் பேசுவது சரியல்ல என்று புரிந்துகொண்ட மாதவன் பேச்சை நிறுத்தினான்.
அப்பொழுது "குல்பி குல்பி..... குல்பி குல்பி..... " என்று இருவரும் ஏற்படுத்திய அமைதியான சூழலை நிரப்பிக்கொண்டிருந்தது குல்பி ஐஸ் விற்பவரின் சப்தம்.
"நிஷா... குல்பி சாப்பிடுறயா" என்று மாதவன் கேட்டான்
நிஷா எதும் பேசாமல் மெளனமாக நின்றாள்.
"நான் குல்பி வாங்கிட்டு வரேன்" என்று சொல்லி மாதவன் குல்பி ஐஸ் விற்பவரிடம் சென்றான்.
"அண்ணா குல்பி இரண்டு தாங்க" என்று குல்பி ஐஸ்சை வாங்கி திரும்பி பார்த்தான்.
மாதவனிடம் போயிட்டு வரேன் என்று வழக்கமாக சொல்லும் பிறியாவிடையை இன்று கூறாமல் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தாள் நிஷா.
"நிஷா...என்ன மன்னிச்சுடு" என்று யாருக்குமே கேட்காத சப்தத்தில் நிஷாவின் பெயரை கூறிக்கொண்டிருந்தான் மாதவன்.

எழுதியவர் : மொழியரசு (13-Oct-17, 10:27 am)
பார்வை : 509

மேலே