பாசமுள்ள கோபக்காரர்

வீட்டையே கலவர பூமியாக மாற்றிக்கொண்டிருந்தார் பாஸ்கர்.
"அவனை ஒரு கல்லூரி பேராசிரியரா மாத்தி பாக்க நான் ஆசைப்பட்ட அவன் சினிமா காரண ஆகப்போறானாம்" என்று கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார்.
பாஸ்கர், அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிபவர். ஆசிரியர் பணியே உலகத்தில் உன்னதமான பணி என்ற சிந்தனை கொண்டவர்.
"சரி சரி அவன்கிட்ட நான் பேசுறேன்" என்று காபியை அத்தியவாரே சமாதான படுத்தினார் கலையரசி.
கலையரசி, ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றுபவர். குடும்பத்தையும் வேலையையும் ஒருங்கே கண்போல பார்க்கும் பாரதிகண்ட புரட்சி பெண்.
"எல்லாம் நீ கொடுக்குற செல்லம் எந்திரவியல் பொறியாளரில் முதுகலைப்பட்டம் படிச்சிட்டு படம் எடுக்க போறானாம்..." கோபத்தில் கத்திக்கொண்டே கலையரசி கொடுத்த காபியை வாங்கி பருக தொடங்கினார்.
"என்னடி காப்பில சீனி கம்மியா இருக்கு, எனக்கென்ன சக்கரை வியாதியா?" என்றார் பாஸ்கர்
"ஐம்பது வயசுக்கு மேல சக்கரை கம்மியா தான் சாப்பிடணும்" என்று சற்று காரராகவே சொன்னார் கலையரசி.
அதற்க்கு மேலே எதுவும் பேசாமல் காபியை குடிக்க தொடங்கினார்.
அப்பொழுது பாஸ்கரின் மகன் வீட்டிற்குள் வந்தான். அவனுக்கும் காபியை எடுத்து கொண்டு வந்தாள் கலையரசி.
"என்னடா முடிவு பண்ணியிருக்க?" என்றார் பாஸ்கர்.
தனது பைக்கட்டில் இருந்து லண்டன் பிலிம் அகாதெமியின் பி. ஏ. பிலிம் மேக்கிங் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை எடுத்து அவனது தந்தையிடம் நீட்டினான்.
"என்னடா இது" என்றார் பாஸ்கர்.
"அப்ளிகேஷன் பார்ம்" என்றான் பாஸ்கரின் மகன்
"ஏண்டா நான் அவ்ளோ சொல்லியும், நீ லண்டனுக்கு சினிமாக்காரனா படிக்க போவியா" என்று மறுபடியும் கத்த தொடங்கினார்.
எதுவும் பேசாமல் பாஸ்கரின் மகன் வேகமாக எழுந்து மாடிக்கு போனான்.
"டே காப்பிய குடிக்காம எங்க போற" என்று கலையரசி சொன்னதை காதில் வாங்காமல்
அங்கிருந்து போனான்.
"நான் தான் அவன்கிட்ட சொல்றேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள எதுக்கு இப்படி கத்தி கலவரம் பண்றிங்க இப்போ பாருங்க என் மகன் காபி குடிக்காம போய்ட்டான்" என்று கலையரசி அவரை
கடிந்துகொண்டாள்.
"இப்போ அவனுக்கு பிடிச்சதை படிச்சு சினிமா எடுக்க போனாதான் என்னவாம்" என்று கோபமாக
கேட்டாள் கலையரசி.
"எவனாவது கல்லூரில இருபத்தி அஞ்சாயிரம் சம்பளத்துல கிடைச்ச வேலைய வேணாம்னு
சொல்வானா" என்றார் பாஸ்கர்
"உங்க மகன் சொல்வான், அவனுக்கு ஆசை சினிமா எடுக்கணும்னு அதுக்கு படிக்க அவனை அனுப்பலாமில்லையா" என்றாள் கலையரசி
"அவன் சினிமா எடுக்க போகலாம் வேண்டாம்னு சொல்லல கல்லூரில செமெஸ்டருக்கு ஒருமாதம் விடுமுறை கிடைக்கும் அப்போ அவன் குறும்படம், ஆவணப்படம் இப்படி எதாவது எடுக்கலாம், அட்லீஸ்ட் இந்தியாலயாவது அந்த படிப்பை படிக்க வேண்டுயது தானே......" என்று இழுத்தார்.
"இப்போ நீங்க என்ன சொல்லவரிங்க" என்றாள் குழப்பத்தோடு கலையரசி
"உனக்கே தெரியும் நமக்கு இருக்குறது இரண்டே பிள்ளைங்க அதுல ஒரே ஒரு பையன்தான் ...."என்றார் பாஸ்கர்.
"சரி அதுக்கு இப்போ பெத்துக்க முடியுமா இன்னொன்ன" என்று கிண்டலாக கேட்டாள் கலையரசி.
"பச். ..அது இல்லடி அவனை இங்கேயே என் பக்கத்துலயே, பார்க்க தோணுனா... பாக்கற தொலைவுல இருந்தா.... நல்லாருக்கும் லண்டன் அப்படினா அவனை எப்படி பாக்குறது" என்று தனது உண்மையான மனநிலைப்பாடை வெளியே சொன்னார்.
"பச். ... இது தான் விஷயமா இம்புட்டு பாசத்தை உள்ள வச்சுக்கிட்டு அவன்கிட்ட ஏன் கோபத்துல கத்துறிங்க, இத நீங்க அவன்கிட்ட சொன்னாலே அவன் கேட்டுப்பானே" என்றாள் கலையரசி.
இவர்களின் உரையாடலை மாடிப்படி அருகில் நின்று கேட்டு கொண்டிருந்தான் பாஸ்கரின் மகன்.
அப்பொழுது பாஸ்கரின் மகனின் செல்லிடப்பேசி கதறியது. செல்லிடைபேசியை எடுத்து பார்த்தான் அது அவனை வேலைக்கு எடுத்த கல்லூரியில் இருந்து வரும் அழைப்பு "ஹலோ சொல்லுங்க சார்" என்றான் பாஸ்கரின் மகன்.
"மிஸ்டர் கார்த்தி எப்போ வந்து கல்லூரியில வேலைக்கு ஜாயின் பண்றிங்க" என்றார் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டாளர்.
"நெக்ஸ்ட் வீக் திங்கள்கிழமை" என்றான் பாஸ்கரின் மகன் கார்த்தி.

எழுதியவர் : மொழிஅரசு (15-Oct-17, 3:32 pm)
பார்வை : 411

மேலே