மர்ம சப்தங்கள்

ஒரு தனி அறையில் சதீஷ் தனது புதிய கண்டு பிடிப்பான 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான ஒலியை கேட்கும் கருவியை செல்லிடைபேசியோடு இணைக்க மென்பொருளை உருவாக்கி கொண்டிருந்தான் . இது அவனது 20 வருட உழைப்பு.

அமனுசிய சப்தங்கள் உலகில் இருப்பதாய் அவன் கண்டுபிடிதிருந்தான் அதனை நிருபிக்க அவன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் இந்த புதிய கருவி.நாம் அன்றாடம் கேட்கும் சாதாரண ஒலிகள் எல்லாம் 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ்க்கு உட்பட்டது . ஹெர்ட்ஸ் என்பது ஒலியின் அளவை குறிக்கும் அலகை.

சதிஷ் தனது ஒலியை கேட்க்கும் கருவியை எடுத்துக்கொண்டு தனது காரில் ஏறினான். அமனுசிய சப்தங்கள் கேட்பதாக கூறப்பட்ட செண்பகத்தோப்பை நோக்கி வேகமாக காரை செலுத்தினான். அவன் மனதில் திகிலும் ஆச்சரியமும் கலந்த ஒரு உணர்வோடு செண்பகதோப்பை அடைந்தான்.

மதிய நேர சூரிய ஒளி லேசாக தோப்பிற்குள் ஊடுருவ மாலையை போல காட்சி அளித்தது மலை அடிவாரத்தில் இருக்கும் செண்பகதோப்பு. மனித நடமாட்டமே இல்லாத அந்த அமைதியான இடம் சதிசுக்கு என்னவோ ஒரு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தது .

பயத்தை வெளிக்காட்டாமல் தனது கருவியை எடுத்து ஆன் செய்தான் சதிஷ். முதலில் கருவியில் 20 கிலோ ஹெர்ட்ஸ்க்கு அதிகமாக வைத்தான் 38 கிலோ ஹெர்ட்ஸ்க்கு வைத்தான் அப்பொழுது வீ ...வீ ....வீ .. என்ற சப்தம் பயங்கரமாக கேட்டது சப்தம் கேட்ட பக்கம் மெதுவாக நடந்து சென்றான் அங்கே கொசுக்கள் வட்டம் அடித்து கொண்டிருப்பதை கண்டான். மீண்டும் கருவியில் 42 கிலோ ஹெர்ட்ஸ்க்கு கொண்டு வந்தான் அப்பொழுது டக் டக் டக்..டக் டக் டக். என்ற சப்தம் கேட்டது சப்தம் கேட்ட பக்கம் மெதுவாக சென்று பார்த்தான் எறும்பு தன் இரையை எடுத்துக்கொண்டு மரத்தில் ஏறி கொண்டிருந்தது...

இந்த முறை கிலோ ஹெர்ட்ஸ்ல் இருந்து ஹெர்ட்ஸ்க்கு மாற்றினான் சதிஸ் 25 ஹெர்ட்ஸ்க்கு மாற்றினான் எந்த சப்தமும் கேட்கவில்லை 50 ஹெர்ட்ஸ்க்கு மாற்றினான் அப்பொழுதும் எந்த சப்தமும் கேட்கவில்லை 100ஹெர்ட்சுக்கு மாற்றினான் இந்த முறையும் அவனுக்கு ஏமாற்றமே அப்பொழுது சோர்ந்து பொய் தரையில் உட்கார்ந்தான் 220 ஹெர்ட்ஸ்க்கு மாற்றினான் எங்கும் நிசப்தம் அப்பொழுது பக்கத்தில் இருந்த சோள செடியை கோபத்தில் பிடுங்கினான் அப்பொழுது யாரோ அலறும் சப்தம் கேட்டது.

அவனை சுற்றி எங்கும் பார்த்தான் யாரையும் காணவில்லை. மீண்டும் நிறைய பேருடைய அலறல் சப்தத்தை கேட்டான் சதிஷ் இந்த முறையும் சுற்றிலும் யாரையும் காணவில்லை தன் காதில் மாட்டி இருந்த கருவியை கழற்றினான். இப்பொழுது அவனுக்கு அந்த அலறல் சப்தம் கேட்கவில்லை. அந்த சப்தம் என்னவாக இருக்கும் என்று என்னி கொண்டே சதிஷ் அந்த இடத்தை விட்டு ஒரு வித பயத்தோடே தனது காரை நோக்கி சென்றான்.

அப்பொழுது அந்த தோப்பின் காவல்காரர் அங்கே நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை கண்டதும் அவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான் சதிஷ்.அண்ணே இங்க காட்ல அலறுற மாதிரி சப்தம் கேட்டு இருக்கிங்களா என கேட்டான். அவன் சொன்னதை கேட்டதும் தோப்பு காவலாளிக்கு முகம் வேர்க்க தொடங்கியது. தம்பி அது வந்து அது நீ அந்த சப்தத்த கேட்டியாப்பா என்றார் ஒரு வித பயத்தோடு.
தொடரும்.....

எழுதியவர் : மொழியரசு (10-Dec-15, 4:23 pm)
சேர்த்தது : மொழியரசு
Tanglish : marma Sapthankal
பார்வை : 714

மேலே