கற்பனை காதலன்

காலத்தையும் மாற்றி அமைக்கும் காதல்!
காலபைரவனையும் கைது செய்யும் காதல்!

காதலிக்காத கடவுள் உண்டோ!
காதலியின் கண்களை வர்ணிக்காத
காதலன் உண்டோ!

கவிஞர்களின் வரிகளை அலங்கரிப்பது காதல்!
வந்தியத்தேவனை சிறைபிடித்தது குந்தவையின் காதல்!

காதலின் வலி சுகம் தானோ!
மீரா காத்திருப்பது நிஜம் தானோ!

வாள் முனையில் தேன் சொட்டும் காதல்,
வஞ்சி மனதில் மையல் கொண்ட
மாய காதல்!!

என் காதலை சொல்ல
மழையை தூது அனுப்பவா !
முடியாதே !!
தூது சென்ற மழை
என்னவனை தீண்டிய சுகத்தில்
சொல்ல வந்த செய்தியை
மறந்து விடுமே !!!

தென்றலை தூது அனுப்பவா !
அல்லது,
தேடி சென்று நானே சொல்லவா!!!

வாடை காற்றே!
வாகை சூடிய என் வாலிபனிடம்
செல்வாயா ?
தூது சொல்ல !!!

ரீங்கார வண்டுகலே!
ரத்தின ரதத்தில் ஏற்றி கொண்டு வாருங்களேன்,
என் ரட்சகனை!!!

வான்மேக கூட்டங்களே!
வானம்பாடிகள் வந்த வழியில்,
கண்டனவா
என் வசீகரனை !!!

பிறை மதியே!
தூது சென்ற நீ
அவன் சந்திர அழகில்
மேலும் மெலிந்து விடுவாயோ!!!

வெள்ளலையே!
வேகமாக செல்லேன் என் வேந்தனிடம்!!!

பனித்துளியே!
பாவை நெஞ்சை நீயாவது சொல்வாயா?
அல்லது,
அவன் சுடர் விழியில் உருகி வீழ்வாயா? !!!

போகட்டும்,

தூது எதற்கு?
கவிதை போதுமே!
என் காதலை சொல்ல !!!

எழுதியவர் : சாந்தி ஜெகதீஷ் (23-Jun-17, 3:39 pm)
சேர்த்தது : Shanthi Jagadeesh
Tanglish : karpanai kaadhalan
பார்வை : 167

மேலே