பூவாசமும் குயிலோசையும்
இளஞ்சிவப்பு காலை, மஞ்சள் வெயில் மாலை,
காலங்கள் மாறுகிறது, அதன் நிறங்களும் மாறுகிறது,
என் கவிதையோ உனக்கான வரிகளை தேடுகிறது !!!
இரவும் வருகிறது, நிலவும் பின்தொடர்கிறது,
தெருவிளக்கின் அடியில்
என் நிழலோ உன் துணையை தேடுகிறது !!!
பூவாசம் வீசுகிறது, குயிலும் கூவுகிறது,
மேகங்களும் வழிவிடுகிறது
இம்மூன்றுமே, நீ வரும் தருணத்தை உணர்த்துகிறது !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
