என்னவளைத் தேடி ஒரு பயணம்

என்னவளைத் தேடி ஒரு பயணம் .,
புதிர் போட்டுக்கொண்டே தொடங்கினேன் நடைப்பயணம் ....

தென்றலே !
திசையில்லாமல் செல்கின்றேன் தென்றல் போல ,
எந்தஒரு மலரிலும் வாசமில்லை அவளது கூந்தல் போல !
தென்றலே ! அவளது வாசம் வீசிய திசை யாது ?
இரவே !
நிலவின் ஒளியும் போதவில்லை ,
மின்னிமியின் துணையும் நீலவில்லை ,
நிலவே ! என் விண்மீனை பார்த்தாயா ?
புயலே !
உன் சூழலில் மிஞ்சியவை எதுவுமில்லை ,
என் இதயம் அதில் மாட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை ,
புயலே ! உன் போட்டியாக வேறொரு புயலை இவ்வழியில் பார்த்தாயா?
வெயிலே !
உன்னைப்போல் சூடானவள் தான் அவளும் ,
உனக்கு தாகத்தை காட்ட கூடியவளும் அவள்தான் ,
வெயிலே ! என் நிழல் இவ்வழி போவதை பார்த்தாயா ?
கடலே !
உன் கடற்கரையில் அவள் காலடி பதிந்ததா ?
பதிந்த காலடியால் உன் மனதிலும் அலை உண்டானதா ?
கடலே ! பார்த்தாயா ,என் சுனாமியை ?
மழையே !
சாரலின் வேகம் போதவில்லை ,
என் தேகம் இன்னும் நினையவில்லை,
இடியின் சத்தமும் கேட்கவில்லை!
மண்வாசம் சற்றும் உணரவில்லை!
மின்னலே ! என்னவளின் மின்னல் சிரிப்பின் ஒலியை கேட்டாயா ?
பாலைவனமே !
இவ்விடம் ஏதேனும் சோலைவனம் உள்ளதா ?
இல்லை,அவள் சென்றதால் வனம் சோலை ஆனதா ?
பாலைவனமே ! என் பாவை எங்கே ?
தீயே !
ஆம் அவள் அழகிய தீயே !
அவளைப் பார்த்தால் அனைவாய் நீயே !
தீயே ! என் இதயத்தின் எரிமலையைப் பார்த்தாயா ?

தென்றலே ! இரவே ! புயலே ! வெயிலே ! கடலே ! பாலைவனமே ! தீயே !
என்னவளும் இயற்கையானவள் தான்,அவளைத் தீண்டாதீர்கள் ,மீறினால்
அவள் அழகால் என்னைப்போல் நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள் !!!

எழுதியவர் : மதியழகன் (18-Dec-16, 4:34 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 493

மேலே