கனவுகள் பலவிதம்

காரிருள் மூழ்கியும்
பளிச்சென்று உன் முகம்..! நான்
கண்டது நிலவோ;அல்ல கனவோ..!!

தூக்கத்தில் நடந்தும்
உன்னைச் சேர முடியவில்லை;நான்
தொடர்வது உன் நிழலோ, இல்லை
அதுவும் கனவோ..!!

கண்கள் துறந்திருந்தும், உன்
முகம் காண வழியில்லை,
வழியெல்லாம் உன் நினைவோ,
விழி துறந்திருந்தும் பகல் கனவோ..!!

உன் கண் புருவக்காட்டில்
என் விரல்கள்
நடை போட வேண்டும்;
நடை முடிந்த பின்பும், அதன்
பயணம் தொடர வேண்டும் ..!
உன் மூக்கின் வளைவில் வேகத்தடைகள்
போடவேண்டும்,மெதுவாய்
கடக்க அது எனக்கு உதவவேண்டும்..!
அனைத்தும் பளிச்சிடும் நினைவோ..
அல்ல பழிக்காத கனவோ..!!




உன் கன்னக்குழியில் பனிப்பொழிவை
சேமிக்க வேண்டும் ; சேமித்த பனியில்
நான் நீச்சல் பழகிட வேண்டும்..!
இளஞ்சிவப்பு கன்னத்தில்
நான் முத்தமிட வேண்டும்;
இடைப்பட்ட பனியை
பணிநீக்கம் செய்யவேண்டும்..!!
இவை அழகான நினைவோ;அல்ல
அதிகாலை கனவோ..!!


என் பளிங்கு பற்களில்
நம் காதல் காவியத்தை கிறுக்கிட வேண்டும்,
காவிய பற்களைக் கொண்டு
மாளிகை ஒன்றை எழுப்ப வேண்டும்..!
நாம் இறந்த பின்பும்
நம் காதலை பேசிட வேண்டும்,
இது, காதல் அல்ல காவியம் என்று
அனைவரும் போற்றிட வேண்டும்..!
நம்மைப்போல் காதலிக்க
வேண்டுமென்றுஅனைவரும்
கனவு காண வேண்டும்..!!

சொர்க்கலோகத்திலும்
நம் கனவு தொடரவேண்டும்;
அங்குள்ளவர்களையும்
கனவு காண கொள்ள வேண்டும்..!!
கனவுகள் தொடரும் .....

எழுதியவர் : மதியழகன் (14-Dec-17, 12:49 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 196

மேலே