சுதந்திரம்

அடிப்படை வசதிகள் என்னவென்றே அறிந்திடாத மக்கள்
அறிவியல் வளர்ந்தும் அதை அறிந்திடாத மாக்களாய்...
அரைவயிற்றை நிரப்பிக்கொள்ள ஆதரவின்றி ஆங்காங்கே
குறைபிரசவமாய் நிலந்தொட்ட குலவிளக்குகள்...
தட்டிக்கேட்க ஆட்களின்றி தகுதிகளற்ற அரசியலார்
வெட்டவெளியில் வெட்டியெரிந்த வெண்துளிர்கள்...
சிறையிலிட்ட கைதிகளுக்கு கிடைத்த சுதந்திரம்கூட
பிறைநிலவாய் வளரும் இப்பிறவிகளுக்கு இல்லை...
" சுதந்திரம் "
இவர்கள் வாய்மொழியும் கானல்நீராய் மட்டும்...