நானோ உலகம்

செயற்கை அறிவே துணை

காலம்: 2067 கி.பி.

அன்புள்ள பெயரனுக்கு

என்னோடு அழிந்த தமிழினை
உன்னோடு சேர்த்த
ஏழாம் அறிவிக்கு
நன்றி !!

பறக்கும் தட்டில்
பள்ளிச் செல்பவனே
மறக்கும் ஒரு நாள்
உன் காலடி ஓசையே

பிரமனின் பணியினை
பங்கிடும் உனக்கு
மரபணு தைத்த
மகன் பிறப்பானோ ?

உணவுடன் வேளைக்கு
ஒரு மாத்திரை எனக்கு
உணவே வேளைக்கு
இரு மாத்திரை உனக்கு !!

கணினிச் சேற்றினில்
கை வைத்தது போதும்
இனி நீ சேற்றினில்
கால் வைத்திடு இல்லையெனில்

காலக்கடத்தியின் துணைகொண்டு
ஞாலப் பிழையினை இனங்கண்டு

திருத்தி அழித்திடு அதைக்கொண்டு
வாழிய நீயும் பல்லாண்டு

எழுதியவர் : மகிழன் (13-Oct-16, 7:20 pm)
சேர்த்தது : மகிழன்
Tanglish : nano ulakam
பார்வை : 477

மேலே