மன்னாதிமன்னர்

#மன்னாதிமன்னர்

பாகம் .. நான்கு

இளைஞன் மன்னரை நோக்கி ..

தங்களின் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். மன்னரை மட்டுமல்ல வேறெவரைப்போற்றி பாடுவதென்றாலும், முதற்பாட்டு இறைவன் அல்லது இறைவியைப் போற்றியே பாடுவதாக இருக்கும். பத்து வெண்பாக்களில் முதல்வெண்பா என் அன்னை கலைவாணி சரஸ்வதி மீதிருக்கும். பாடிமுடித்தபின் அமைச்சர் நான் பத்துப்பாட்டு பாடவில்லை, ஒன்பது தான் பாடினேன் எனக்கூறி பரிசு கிடையாது என்று சொல்லலாமல்லவா. எனவே, பத்தல்ல பதினொன்று வெண்பாக்கள் பாட அனுமதியளிக்கவேண்டுகிறேன், மன்னா.

மன்னர் அமைச்சரை நோக்கி, இவன் சொல்வது சரிதான் எனத்தோன்றுகிறது. இவன் அம்பிகாபதி திரைப்படம் பார்த்திருப்பானென்று நினைக்கின்றேன். நீர் அப்படி ஏதாவது திட்டம் தீட்டிவைத்துள்ளீர்களா, என்ன, அமைச்சரே.

அப்படி ஒரு திட்டம் எனக்கில்லை மன்னா. எதற்கும் இவனை பதினோரு வெண்பாக்களே பாடச்சொல்லுங்கள். ஏதாவதொரு பாவில் பிழை வராமலா இருக்கப்போகிறது.

சரி தான். ஒருவேளை சரியாகப் பாடி பொற்கிழி வென்றுவிட்டால் நம்நாட்டின் நிதிநிலை இன்னும் சற்று கூடவே மோசமாகிவிடும். அப்படியொரு நிலை வாராதிருக்க, என் கையில் ஒரு திட்டம் இருக்கிறது, அமைச்சரே.

என்ன, நிதிநிலை சீர்படுத்தத் திட்டம் மன்னரிடம் இருக்கிறதா. ஆச்சரியமாக இருக்கிறது, என்னவென்று சொல்லுங்கள், மன்னா.

ஆச்சரியப்படமாட்டீர், அமைச்சரே. அதிர்ந்துபோவீர்கள். சொல்கிறேன், கேளும்.

சொல்லுங்கள், மன்னா.

பேரானந்தம் பொற்கிழி பரிசு பெற்றுவிட்டால், அதையெல்லாம் உமது சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துவிடலாம் என்பதுதான் என் திட்டம்.
எத்தனை முறை என்னை முட்டாளென்று சொல்லாமல் சொல்லி இருக்கறீர். ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா ..
இப்பொழுது சொல்லும், நான் முட்டாளா?

.. தொடரும் ..

எழுதியவர் : VENKATACHALAM DHARMARAJAN (27-Mar-23, 12:10 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 61

மேலே