அப்பா கயா பயா

ஏன்டி ஆப்பா...
@@@@@
ஐயோ பெரியம்மா எம் பேரு ஆப்பா இல்ல. ஆபா (Aabha).
@@@@@@
சரிடி ஆப்பா. உனக்கு இரண்டும் பெண் குழந்தைகளாமே!
@@@@@@
ஆமாம் பெரியம்மா.
@@@@@@
நீ அதிர்ஷ்டக்காரிடி. வருங்காலத்தில் அவுங்களுக்கு திருமணம் ஆகறப்ப சீரு சிறப்பு நிறையக் கிடைக்கும்டி. அவன் அவன் பொண்ணுக் கெடைக்காம அலைஞ்சு திரிந்து உங்க வீட்டு வாசலில் தவம் கிடப்பானுகடி. சரி உம் மூத்த குழந்தை பேரு என்ன?
@@@@@@
கயா.
@@@@@@
இந்திப் பேரா?
@@@@@@
இல்லை. பூர்வீக அமெரிக்கர்கள் பேசற மொழில இருக்கிற பேரு. எல்லாம் இந்திப் பேரை வைக்கிறாங்க. நாங்கள் வித்தியாசமா 'கயா'ங்கிற பேரை வச்சுட்டோம். இந்திப் பேரு மாதிரியே அழகாக இருக்குது.
@@@@@@
சின்னவள் பேரு?
@@@@@@
அவள் பிறந்து நாலு நாள் தான் ஆகுது. 'கயா' மாதிரி பேரை தேடிட்டு இருக்கிறோம்.‌
@@@@@@@
அடி போடி. எதுக்குடி தேடறீங்க. மூத்தவள் 'கயா'னா சின்னவளுக்கு 'பயா'னா வச்சுருங்க.
@@@@@@
உம் நல்ல பேருங்க பெரியம்மா. இந்திப் பேரு மாதிரியே இருக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@########
Kaya= Elder sister. Native American name.
Paya = Meaningless name.
Aabha = Glow. Indian origin. Feminine name.

எழுதியவர் : மலர் (26-Mar-23, 12:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 52

மேலே