மன்னாதிமன்னர்

#மன்னாதிமன்னர்

பாகம் .. ஐந்து

பேரானந்தம் பொற்கிழி பரிசு பெற்றுவிட்டால், அதையெல்லாம் அமைச்சரின் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துவிடலாம் என்பதுதான் மன்னரின் திட்டம்என்பதைக் கேட்டதும், அதிர்ச்சியில் அமைச்சர், தான் அவையில் அமர்ந்திருப்பதை மறந்து, மன்னாஆஆஆஆ என்று உரக்கக்கத்திவிட்டார். மன்னரும் அவையோரும் ஒருநொடி நடுங்கிவிட்டனர்.

அமைச்சரே, என்ன நடந்தது. ஏன் குச்சலிட்டீர். அவையில் அமர்ந்திருக்கும்போதே உறங்கிவிட்டீரா, பயங்கர பகற்கனவு ஏதேனும்கண்டீரா. நானும் ஒருநொடி நடுங்கிவிட்டேன். அவையோரும் அவ்வாறே நடுங்கிவிட்டனர். உமது உடலும் உள்ளமும் நலம்தானே என்று வினவ, தன்னை நன்கு சுதாகரித்துக்கொண்ட அமைச்சர், தன் தவறை உணர்ந்து, தன்றை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார்.

மன்னர் பின் அவையோர் அனைவரையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பேரானந்தனிடம்,

பேரானந்தா, நீ விரும்பியதுபோல் பதினொன்று வெண்பாக்கள் பாட அனுமதிக்கின்றேன். அச்சமின்றி அரங்கேற்று உன் வெண்பாக்களை என்றதும், இளைஞன் மன்னரையும், அமைச்சர்களையும், ஏனைய அவையோர்களேயும் வணங்கிவிட்டு, முதற்பாட்டு கலைமகள் மீது பாடிவிட்டு, அடுத்தடுத்து பத்து வெண்பாக்கள் மன்னரைப் புகழ்ந்தும் பாடிமுடிக்கின்றான்.

ஒவ்வொரு பாக்களும் அவலோகிதத்தில் இடப்பட்டு சரிபார்க்கப்பட்டபின், பதினோரு பாக்களும் தளைகள் இன்றி அமைந்துவிட்டன என்று மன்னர் அறிவிக்கவும் அவையோர் கைதட்டி இளைஞனைப் பாராட்டுகின்றனர்.

மன்னரின் குணாதிசியங்களை பத்து வெண்பாக்களில் பாடி மன்னரின் பெருமையை பல்லோர்க்குணர்த்தியதால் மன்னர் பேரானந்தமடைந்து, பொற்கிழி ஒன்று வரவழைத்து, இளைஞனி்டம் கொடுத்து, சென்றுவா என்று சொல்லவும், அமைச்சர் மன்னரிடம், மெல்லிய குரலில்,

மன்னரே, சென்றுவா என்று சொல்லி இருக்கவேண்டாம். ஏனென்றால், இன்னொரு நாள் மீண்டும் வந்து, உங்களைக்கண்டு, அந்தாதி நூறு மன்னர்
புகழ் பாடி பெற்கிழி பெற்றால் நானும் என்குடும்பமும் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் என்றதும், மன்னர்
கலகலவென்று சிரிக்க, மன்னரின் திடீர் சிரிப்பிற்கு காரணம் என்னவென்று அறியாத அவையோர் அனைவரும் சேர்ந்து கலகலவென்று சிரிக்க, அவர்கள் சிரிப்பொலி அரண்மனை எங்கும் பரவியது.

.. வெங்கடாசலம் தர்மராஜன்

.. முற்றிற்று ..

எழுதியவர் : VENKATACHALAM DHARMARAJAN (28-Mar-23, 10:15 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 56

மேலே