பல்லுவீரு
உரையாடல் குறுங்கதை
*****************************
ஏண்டா கல்லுசி....
பாட்டி, எனக்கு தாத்தா பேரை 'கல்யாணராமன்னு வச்சீங்க. என் நண்பர்கள் என்னைக் "கல்யாணம், கல்யணம்" இன்னு சொல்லிக் கூப்படறாங்க. எனக்கு அது பிடிக்கல. சிலர் ராம்ஜி, ராம்கி இன்னெல்லாம் பேரை மாத்திக்கிறாங்க. அதனால நானும் எம் பேரைக் கல்ஜினு மாத்திட்டேன். என்னைக் கல்லுசினு கூப்பிட்டு இழிவுபடுத்தாதீங்க.
அது சரி. உம் பையனுக்கு எதுக்குட பல்லுவீருனு பேரு வச்ச? அஞ்சு வயசு ஆகுது, இன்னும் கட்டை விரலைச் சூப்பறான். பல்லுத் தூக்கிட்டு வருது. அவனைக் குறை சொன்னா கட்டை விரலைச் சூப்பிட்டு வீரு வீருனு கத்தறாண்டா.