என்ன கல்லுப்புடா

பொண்ணுக்கு என்ன பேரு வச்சிருக்காங்க?
@@@@@@
பையனைத்தான்டா கேட்கணும் தம்பி.
@@@@@
என்னமோ உப்பாறு முடியற மாதிரி பேருன்னு சொன்னதா ஞாபகம் வருது.
@@@@@
ஆமான்டா தம்பி 'சங்கல்லுப்பு'னு தான் நினைக்கிறேன்.
@@@@@@@
(பேரன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டே):
என்ன உப்பைப் பத்தி பேசறீங்க? கல்லுப்பு எல்லாம் யாரு வாங்கறாங்க. எல்லாம் அயோடின் கலந்த உப்புத்தான்.
@@#@##@@@#
எல்லாம் பொண்ணு பேரைப் பத்தித்தான்டா பேரா பேசிட்டு இருந்தோம். என்ன உப்பு உம் பொண்ணு பேரு.
@@@@@@
'சங்கல்ப்'. ஓ...எம் பொண்ணுப் பேரைத் தான் 'சங்கல்லுப்பு'னு சொன்னீங்களா?
அருமையான பேரு. உங்களுக்கு அதெல்லாம் எங்க புரியப் போகுது? நல்ல வேளை செங்கல்லுப்புனு சொல்லாம விட்டீர்களே. தமிழர்கள் யாரும் வைக்காத அழகான இந்திப் பேரை எம் பொண்ணுக்கு வச்சிருக்கிறோம். அதைப் பாத்து பெருமைப்படணும்.
@@@@@@
பெருமைப் படறோம்டா உப்பா. இல்ல. இல்ல. அப்பா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sankalp = Willpower, Resolution.

எழுதியவர் : மலர் (28-Mar-23, 8:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 77

மேலே