கொ ப செ பதவி வேண்டும்

தலைவரே, நம்ம கட்சில உறுப்பினர்களைச் சேர்க்கிறது குதிரைகள் கொம்பா இருக்குது. அஞ்சு இலட்சம் செலவு பண்ணி ஆயிரம் பேரை கட்சில சேர்த்தேன். எனக்கு வட்டத் தலைவர் பதவி கொடுத்தீங்க.
@@@@@@
வேறென்ன வேண்டும்?
@@@@@@@
பொய், வதந்தி பரப்பர போட்டித் தேர்வில் எனக்கு தங்கப் பதக்கம் கொடுத்தீங்க. எனக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தீங்கனா நான் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து மத்த கட்சிக்காரங்களப் பேசவிடாமல் அடிக்கடி குறுக்கிட்டு எதாவது பொய்த் தகவலைச் சொல்லி நம்ம கட்சிக்கு நல்ல விளம்பரம் தேடிக் கொடுப்பேன். இதை நான் சிறப்பாச் செய்தா நீங்கள் நம்ம கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரணும்.
@@@@@@@
அஞ்சு இலட்சம் செலவு பண்ணி ஆயிரம் பேரை கட்சில சேர்த்திருக்கிற. உன்கிட்டே கறுப்புப் பணம் நிறைய இருக்கும் போல தெரியுது. செய்தித் தொடர்பாளர் பதவி வேணும்னா எனக்கு பத்து இலட்சம் கொடு.
கட்சில பணம் கொட்டிக் கிடக்குது. இந்தப் பணம் எனக்கு... எனக்குத்தான். கொ.ப.செ ஏற்கனவே மூணு பேரு இருக்கிறாங்க. செய்தி தொடர்பாளரா உனது திறமையைக் காட்டு. அதுக்கப்பறம் இருபது இலட்சம் கொண்டு வா. உன்னை நாலாவது கொ.ப. செ. வாக நியமிக்கிறேன்.
@@@@@@
சரிங்க தலைவரே. செய்தித் தொடர்பாளர் தகுதிச் சான்றிதழைக் கொடுங்க இன்னிக்கே தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து உலகத் தமிழர் எல்லாம் நம்பற மாதிரி பொய் பேசறேன். ஒன்றைச் சொல்லி விட்டு அடுத்த பத்து நிமிசத்தில "நான் அதைச் சொல்லவே இல்லை"னு கோபத்தோடக் கத்திப் பேசி விவாதத்தை மடைமாற்றம் செய்திடுவேன்.
@@@@@@@@
சென்று வா. மல்லு மண்டையா.

எழுதியவர் : மலர் (30-Mar-23, 8:24 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 56

மேலே