Venkatachalam Dharmarajan- கருத்துகள்
Venkatachalam Dharmarajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [38]
- மனக்கவிஞன் [31]
- கவின் சாரலன் [29]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
ஐயா, வணக்கம். உலகை ஒருவரால் திருத்த முடியாது. ஆயின், பலரும் முயன்று தன்னை மாற்றிக்கொண்டால் உலகம் தானாகவே மாறிவிடும் என்பதே பொருள்.
சீரும் என்பதே சரி. சீர் என்றால் பெண்கள் திருமணத்தின் போது கொடுக்கப்படும் பொருள்கள். சீர் கொடுத்தால் சகோதரி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இது வரும்.
சீறு என்றால் கோபம் கொண்டு கூறுவது.
வர்ஷ் என்றால் மழை என்று பொருள். வர்ஷன் என்றால் மழைதரும் வர்ணன் என்று பொருள் .
சம்பத் குமார் அவர்களே !
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி
ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி
மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய்
ஈற்றடியில் வைத்தேனீ சா
பல விகற்ப இன்னிசை வெண்பா
முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி
ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி
மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய்
நல்கிடலாம் நாளும்வெண் பா
சம்பத் குமார் அவர்களே ! தேடக் கிடைக்கும் வலைத்தளத்தில் யாப்பு இலக்கணம். ஓரிரு முறைகள் படித்தால் போதும்.
ஐயா .. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
He was the Manager of bharathan Talkies in Tenkasi for a long long time. You may be knowing him .. sir.
இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளனவே.
வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..
பற்றுகொஞ்சம் தித்திக்கும் செந்தமிழ் மீதிருக்கத்
தொற்றியதோர் ஆசையில் முற்றிலும் யாப்புநான்
கற்பதற்குள் மற்றொருவர் சொற்றொடரில் உள்ளபிழை
உற்றுநோக்கின் குற்றமா மோ
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
குழியொன் றெடுத்து மரக்கன் நடுமின்
வழித்தட மெல்லாம் செழித்தோங்கி நிற்கும்
பெருமர மீதில் குலுங்கும் மலர்கள்
சிரிப்பில் உதிருமே பொன்
வாழ்க வளமுடன் எனக்கூறி, வைத்தேன் ஒரு வெண்பா உமக்கு !
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
குழியொன் றெடுத்து மரக்கண் நடுமின்
வழித்தட மெல்லாம் செழித்தோங்கி நிற்கும்
பெருமர மீதில் குலுங்கும் மலர்கள்
சிரிப்பில் குளிரும் மனம்.
வெண்டுறை ..
ஆண்டவனை தரிசிக்க ஆலயம் மிதித்தவனை
ஆலயத்தில் யானை ஆவேசம் கொண்டதும்
அடக்காமல் ஆண்டவன் தானும் பார்த்திருக்க
ஓலமிட்டு இறந்தான் ஓர்கவி
கால்பதித்த பாரதியைப் பார்த்தும் ஏனோ
பாரா திருந்தான் பார்த்த சாரதி
பாதமே கதியெனப் பாடாதிருந் தானோ
கால்மிதிக் கக்களி றும்
ஆதி மூலமாய் அன்று வந்து
காத்து அருளிய களிறோ ஆலய
வாசலில் வந்த பாரதியைக் கால்மிதிக்கப்
பார்த்திருந் தாய்நீ
மகிழ்ச்சி !
எல்லாம் கனவு தான் ஐயா.
நன்றி.
வாழ்த்துக்கள் !
நீர் வரும் வழியை தடுத்து கட்டிடங்கள் இருந்தனவோ என்னவோ .. ஐயா !
வருகைக்கு நன்றி. வந்தனம்.
வெண்டுறை ..
கண்டதும் காதலாகிக் கசிந்தால் கவிதை
கண்டுசெய் வாரடி கிண்டல் அதைநீ
கண்டும் காணா தவர்போல் இருந்திடல்
வேண்டுமடி கிளியே