Elumalai.A - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Elumalai.A |
இடம் | : Vellore |
பிறந்த தேதி | : 03-Dec-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 702 |
புள்ளி | : 212 |
I am a Civil Engineer
யாவும் தோற்ற மாயைகளே!!.........-வித்யா
என் வார்த்தைகள் வன்மம் சுமப்பின் மென்மையாய் பொறுத்துக் கொள்ளுங்கள்......... என் வார்த்தைகளின் சுபாவம் அப்படி. அதனோடு கோபம்கொள்ளாதீர்கள் நட்புகளே.....!!
வெள்ளைத்தோலுக்கு மனிதச் சந்தையில் இவ்வளவு மதிப்பா..........வண்ணங்கள் புவியளப்பின் கருமையும் ஒரு நிறமன்றோ.......! இளஞ்சிவப்பும்.......பொன்மேனியும் கண்கவருமெனில் அடர்கருமையும்......மாநிறமும் மண்ணிற்குள் புதைபடுமா...?அழகிய ஆண் சுமாரான நண்பர்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்..... அழகானப் பெண்ணின்தோழிகள் இவளோடு செல்லும் போது நாம் சுமாராகி விடுவோமோ..??
இருக்கின்ற ஒன்றை
***இல்லையென்று சொல்பவரே
இல்லையென்று சொல்வதனால்
***இல்லாமல் போய்விடுமோ?
காணும் காட்சியெல்லாம்
***கடவுளின் சாட்சியடா
வானும் மண்ணும்கூட
***வணங்காமல் இல்லையடா
அறியாமை இருள்நீக்கி
***அகத்தில் ஒளியேற்றும்
சரியான மார்க்கத்தை
***புரியாமல் போகாதே
பெற்றவளை வீதிதள்ளி
***பெரும்பாவம் செய்துவிட்டு
மற்றவளை தாயென்று
***மறந்தும் சொல்வாயோ?
உடல்தந்த தாயைநீ
***உலகமாய் மதித்துவிட்டு
உயிர்தந்த இறைவனை
***உதறித்தான் செல்வாயோ?
சுண்டுவிரல் தந்திடுமா
***சுகம் தரும் விஞ்ஞானம்
என்று நீ சிந்தித்தால்
***ஏகத்துவம் விளங்காதா?
சிலையும் சித்திரமும்
***சிந்த
==========================================
நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு
==========================================
அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே
==========================================
கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது
==========================================
ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்
==========================================
சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை
==========================================
காதல் நீ
காதலில் நான்....!
படுக்கையில் பிரவேசிக்கும் முன்
காட்டுப்பூக்களில் பாதம் பதித்து
கதகதப்பாக்கிக்கொள்............
காற்றுப்பூக்களில் சுவாசம்
வாங்கி சேமித்துக்கொள்.......
புதன்,வெள்ளி
பூமி,செவ்வாய்
வியாழன்,சனி
யுரேனஸ்,நெப்டியூன்
ப்ளுட்டோ...........
என நவகிரகங்களை
ஒவ்வொன்றாக அணைத்துவிட்டு
அணைந்ததை உறுதி செய்துவிட்டு
காதல் தரும் ஒளியில்
நடந்துவா...... வழக்கம் போல
கட்டில் கால் இடித்துக்கொள்ளாமல்
பார்த்துக்கொள்.......
கரடுமுரடான பூக்கள்
கொண்டு செதுக்கப்பட்ட
உன் இதழ்களால்.....
என் இதழ் தொடு......
இதயத்தின் கதவு
திறந்து உன் காதல் சொல்......
கா
செவிலியர்: ''ஏங்க பாடி காட்டுங்க''
நோயாளி:''உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல''
செவிலியர்:''அய்யோ ! அய்யோ! நான் உங்க பாடிய (Body ) காட்டச்சொன்னேன்''
அதே அன்பு...
அதே அரவணைப்பு...
அதே அர்பணிப்பு...
அதே பாசம்...
அதே நேசம்...
அதே கண்டிப்பு...
அதே கம்பீரம்...
அதே தைரியம்...
அதே வலிமை...
அதே ஆற்றல்...
அதே தேற்றல்...
அதே பக்குவம்...
அதே பேச்சு...
என் அம்மாவிடம்
கண்ட அனைத்தும்
இன்று என் மகளிடமும்...
''என்னதான் நீ பெரிய 'கொம்பனா' இருந்தாலும் மாடு முட்ட வரும்போது திருப்பி முட்ட முடியாது''
இப்படிக்கு,
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெறும் வேடிக்கை மட்டும் பார்ப்போர் சங்கம்...
'' ஐயா... காலைல இருந்து என் மனைவியை காணோமுங்க...''
''யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா....''
''அய்யோ அய்யோ... சந்தோசத்துல எது போஸ்ட் ஆபீஸ் எது போலீஸ் ஸ்டேஷன்னு கூட தெரியல...''