உன் காதலால் ஆனவள்-வித்யா

காதல் நீ
காதலில் நான்....!

படுக்கையில் பிரவேசிக்கும் முன்
காட்டுப்பூக்களில் பாதம் பதித்து
கதகதப்பாக்கிக்கொள்............

காற்றுப்பூக்களில் சுவாசம்
வாங்கி சேமித்துக்கொள்.......

புதன்,வெள்ளி
பூமி,செவ்வாய்
வியாழன்,சனி
யுரேனஸ்,நெப்டியூன்
ப்ளுட்டோ...........

என நவகிரகங்களை
ஒவ்வொன்றாக அணைத்துவிட்டு
அணைந்ததை உறுதி செய்துவிட்டு

காதல் தரும் ஒளியில்
நடந்துவா...... வழக்கம் போல
கட்டில் கால் இடித்துக்கொள்ளாமல்
பார்த்துக்கொள்.......

கரடுமுரடான பூக்கள்
கொண்டு செதுக்கப்பட்ட
உன் இதழ்களால்.....
என் இதழ் தொடு......

இதயத்தின் கதவு
திறந்து உன் காதல் சொல்......

காலம் தொலைத்த
இரவுகளுக்குள் கண்மூடு........

நாளைய நம் விடியல்
ஒரு புதிய பிரபஞ்சத்தில்........!

நீ தூரத்தில்
உன் காதல் என் பக்கத்தில்......!





-என்றென்றும் உன் காதலால் ஆனவள்.




===============================================

எழுதியவர் : வித்யா (5-May-14, 10:45 am)
பார்வை : 277

மேலே