இதயம் திற 0தாரகை0

இருக்கின்ற ஒன்றை
***இல்லையென்று சொல்பவரே
இல்லையென்று சொல்வதனால்
***இல்லாமல் போய்விடுமோ?

காணும் காட்சியெல்லாம்
***கடவுளின் சாட்சியடா
வானும் மண்ணும்கூட
***வணங்காமல் இல்லையடா

அறியாமை இருள்நீக்கி
***அகத்தில் ஒளியேற்றும்
சரியான மார்க்கத்தை
***புரியாமல் போகாதே

பெற்றவளை வீதிதள்ளி
***பெரும்பாவம் செய்துவிட்டு
மற்றவளை தாயென்று
***மறந்தும் சொல்வாயோ?

உடல்தந்த தாயைநீ
***உலகமாய் மதித்துவிட்டு
உயிர்தந்த இறைவனை
***உதறித்தான் செல்வாயோ?

சுண்டுவிரல் தந்திடுமா
***சுகம் தரும் விஞ்ஞானம்
என்று நீ சிந்தித்தால்
***ஏகத்துவம் விளங்காதா?

சிலையும் சித்திரமும்
***சிந்தையை ஒருங்கிணைக்கும்
கலைகள் என்பதைநீ
***கவனிக்க மறுப்பாயோ?

ஒன்றும் இல்லாமலே-உனை
***உருவாக்கிய ஒருவனால்
மண்ணில் புதைத்தெழுப்ப
***மறுபடியும் முடியாதா?

எழுதியவர் : தாரகை (4-May-14, 1:34 pm)
பார்வை : 183

மேலே