இனம்

எமை நஞ்சு தந்து கொள்வதற்கு
சிலர் முயற்சிக்கின்றனர்
எங்களுடன் வாழ்ந்தவர்கள்
இப்போது இல்லை
காணி நிலம் வேண்டும் என்றார் பாரதி
இன்று எங்கள் காணி நிலங்கள்
பறிக்கப்படுகின்றது
பாவப்பட்டு நிற்கின்றோம்
கொதித்துக் கொண்டிருக்கிறது மனம்
வரும் கோபத்திற்கு ஏதாவது
செய்யவேண்டும்
பூமியை பிளந்து
இவர்களைப் அனுப்ப வேண்டும்
சூரியனில் போட்டு எரிக்க வேண்டும்
செவ்வாய் கிரகத்திற்கு கடத்த வேண்டும்
எப்படி இருந்தாலும் திருந்தமாட்டார்கள்
தங்கள் இனம் மட்டும்
வளர வேண்டும் என நினைப்பவர்கள்
எங்களை தினம் தினம் குட்டிக் குட்டிக்
குனிய வைக்கின்றனர் ......................