நம்பிக்கை
நெஞ்சம் ஒன்றை நினைத்தால்
அதை தினம் உதடுகள் உச்சரித்தால்
வெற்றிப் படி ஏறி வானம் தொடுமே
நம்மை நம்பினால் நாளை
உலகை வெல்லலாம்
திட்டம்மிட்டு செய்தால்
நிலவில் விளையாடலாம்
புத்திக் கூர்மை உண்டு நமக்கு
புதிர்களை களைந்திட
சாதிக்கும் எண்ணம் சாகாது போனால்
சரித்திரம் சத்தியமாக நம்மை பேசும்
பேராசையை விரட்டுவோம்
மூடக்கொள்கையின் முதிகில் ஏறி மிதிப்போம்
பகுத்தறிவு பகலவனாக மாறுவோம்