G.S.Vasan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : G.S.Vasan |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 20-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 721 |
புள்ளி | : 25 |
படித்தது ஸம்ஸ்க்ருதம். இருந்தும் சிறு வயது முதலே தமிழின் மீது தனி ஈர்ப்பு. அதற்கு நீரூற்றி வளர்த்தது எங்கள் மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் உயர்திரு. இரகுவீரன் அவர்கள். அவருடைய தாக்கத்தால் இப்படி எதையாவது எழுதும் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆனால் அதிகமாக கவிதை எழுதத் தெரியாது. அவ்வப்போது கிறுக்கிய ஒரு சில துளிகளை இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்... இந்த கவிதைகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்... மறக்காமல் கீழே உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
புலம்பெயர்ந்தது நெல்
----------------------------------------
இரத்தக் காட்டேரிகளின்
சிவப்புக் குளியலில்
மண் கொண்டது ஈரம்
வெள்ளை மேகம்
நொறுங்கிவிழும்முன்
இழுத்துக்கொண்டது நீலம்
உறிஞ்சுதற்கு நாதியின்றி
இருந்த நீரையே
கொப்பளித்தது கடல்
நீதியின் நீண்ட
நித்திரை வாழ்வியலை
வாய்பிளந்து கெக்கரித்தன
நிலங்கள்
கற்றைத்தாள்கள் கவனமாக
மனிதனை மேய்த்துக்
களிப்பில் மிதக்க
ஒற்றை நெல் தன்னைப்
புலம் பெயர்த்துக் கொண்டது
உலைக்கு அரிசி தேடாத
ஊரைத்தேடி...
-----------------------------------------------------------------------
படைத்தவர்:
பெயர்: மீ.மணிகண்டன்
புனைப
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பலருக்கு பலவிதமான பாடங்களை புகட்டி இருக்கிறது. இந்த வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதை ஒரு சாக்காக பயன்படுத்தி, மிகவும் கீழ்தரமாக செயல்பட்ட ஒரு சில அரசியல் வியாதிகளையும், ஃபோட்டோ பிரியர்களையும், வீடு புகுந்து திருடிச்சென்ற அயோக்யர்களையும் விமர்சிக்கவோ, திட்டவோ கூட தகுதியற்றவர்களாக கருதி, அது மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றி நினைப்பது கூட தாய் தமிழ் நாட்டிற்கு அவமானம் என்பதால் ஏனையோரை இந்த பதிவில் புறந்தள்ளுகிறேன்.
முதலாவதாக மனிதனும், மனிதமும் மட்டுமே வாழ்க்கை என்று சற்றே வலுவாக சொல்லித் தந்த மாபெரும் மழைக்கு சிரம் தாழ்த்தி வணக்கங்களையும், நன்றியையும்