புலம்பெயர்ந்து நெல்
புலம்பெயர்ந்தது நெல்
----------------------------------------
இரத்தக் காட்டேரிகளின்
சிவப்புக் குளியலில்
மண் கொண்டது ஈரம்
வெள்ளை மேகம்
நொறுங்கிவிழும்முன்
இழுத்துக்கொண்டது நீலம்
உறிஞ்சுதற்கு நாதியின்றி
இருந்த நீரையே
கொப்பளித்தது கடல்
நீதியின் நீண்ட
நித்திரை வாழ்வியலை
வாய்பிளந்து கெக்கரித்தன
நிலங்கள்
கற்றைத்தாள்கள் கவனமாக
மனிதனை மேய்த்துக்
களிப்பில் மிதக்க
ஒற்றை நெல் தன்னைப்
புலம் பெயர்த்துக் கொண்டது
உலைக்கு அரிசி தேடாத
ஊரைத்தேடி...
-----------------------------------------------------------------------
படைத்தவர்:
பெயர்: மீ.மணிகண்டன்
புனைப் பெயர்: மணிமீ